வெள்ளி, 25 டிசம்பர், 2020

கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம்; இலங்கையில் அமைதி போராட்டம்

 இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பாள் இறந்த முஸ்லிம்களின் உடல்களை இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு எதிராக தகனம் செய்யும் இலங்கை அரசின் கொள்கைக்கு எதிராக கொழும்புவில் புதன்கிழமை அமைதிப் போராட்டம் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை புதைப்பதற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளபோதிலும், இலங்கையில் முஸ்லிம்களின் உடல்களை இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு எதிராக தகனம் செய்யும் இலங்கை அரசின் கொள்கைக்கு எதிராக கொழும்புவில் புதன்கிழமை அமைதிப் போராட்டம் நடைபெற்றது.

இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் சிவில் சமூக குழுக்களும் கலந்து கொண்டன.

இலங்கையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் அந்நாட்டு சுகாதாரத்துறையினர் தகனம் செய்து வருகின்றனர். இதில், இலங்கையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு எதிராகவும் அவர்கள் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இலங்கை சுகாதாரத்துறை அதிகாரிகள் தகனம் செய்வதாக முஸ்லிம்கள் குற்றச்சாட்டினர்.

இலங்கையில் முஸ்லிம் குழுக்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களை இலங்கை சுகாதாரத் துறையால் இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு எதிராக பலவந்தமாக தகனம் செய்யப்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

அதற்கு பயந்து, அவர்களில் சிலர் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை ரகசியமாக புதைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள் உடலை அடக்கம் செய்வதற்கு இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச மாலத்தீவிடம் உதவி கேட்டதாகவும் அதற்கு மாலத்தீவு உதவத் தயார் என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துலா ஷாஹித் தெரிவித்தார். ஆனால், இது தொடர்பாக இலங்கை அதிகாரப்பூர்வமாக தகவல் தொடர்பு மேற்கொள்ளவில்லை. அதனால், மாலத்தீவு உதவி செய்ய முன்வந்துள்ளது குறித்து இலங்கை அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்று இலங்கை அரசு கூறியது.

இறந்தவர்களை தகனம் செய்யும் முறை இஸ்லாம் மற்றும் யூத மதத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மதங்களை சேர்ந்தவர்களை அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்வது தொற்றுநோய் பரவுவதற்கு வழிவகுக்கும் என்று இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.

பொது சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களை தகனம் செய்ய தேவை இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அறிவுறுத்திய போதிலும், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை இலங்கை அரசு தொடர்ந்து எரித்து வருகிறது.

இந்த நிலையில், இலங்கையில் முஸ்லிம்களின் உடல்களை இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு எதிராக தகனம் செய்யும் இலங்கை அரசின் கொள்கைக்கு எதிராக கொழும்புவில் புதன்கிழமை அமைதிப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தலைமை தாங்கினார். போராட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய சமூகக் குழுக்கள் கலந்துகொண்டனர்.

இதனிடையே, கோவிட் -19 தொற்றால் இறந்த உடல்களை அகற்றுவது தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களில், முஸ்லிம்கள் இறந்தால் இறுதி சடங்குகளில் அவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் இதுவரை 38,059 கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. 183 பேர் உயிரிழந்துள்ளனர்.