கர்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கூச்சல் குழப்பம் ஏற்பட்டதையடுத்து, துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடாவை இருக்கையில் இருந்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை இழுத்து வெளியே தள்ளியதால் பரப்பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை கூடியபோது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் அவை நடவடிக்கைகளைத் தொடங்க இருக்கையில் வந்து அமர்ந்தார். இருப்பினும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் துணை சபாநாயகரை இருக்கையில் இருந்து வெளியேற்ற முயன்றன்தால் அது அவையில் தள்ளுமுள்ளுவுக்கு வழிவகுத்தது. பிறகு அவர்கள் தலைவர் கே.பிரதாப்சந்திர ஷெட்டியை அழைத்துச் சென்று அமரவைத்தனர். இதனைத் தொடர்ந்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறிய பின்னர், அவைத் தலைவர் சட்டப் பேரவை அமர்வை ஒத்திவைத்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக தலைவர் எஸ்.பிரகாஷ் இந்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டார். மேலும், அவர் “சட்டப்பேரவை மூத்தோர் சபை என்று அழைக்கப்படுகிறது. பொறுப்பான நடத்தை அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.” என்று கூறினார்.
இதனிடையே, காங்கிரஸ் எம்.எல்.சி பிரகாஷ் ரத்தோட் கூறுகையில், “துணைத் தலைவர் சட்டவிரோத அமர்வு என்பதால் வெளியேற்றப்பட்டார்” என்றார். ரத்தோட் விளக்கி கூறியதாவது, “சபை ஒழுங்காக இல்லாதபோது, பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் அவரை சட்ட விரோதமாக நாற்காலியில் அமர வைத்தனர். பாஜக அரசியலமைப்பு அல்லாத நடத்தைகளில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது. காங்கிரஸ் முதலில் அவரிடம் (துணைத் தலைவர்) நாற்காலியில் இருந்து இறங்குமாறு கேட்டுக் கொண்டது. அதன் பிறகு அது சட்டவிரோத அமர்வு என்பதால் நாங்கள் அவரை வெளியேற்ற வேண்டியிருந்தது.” என்று கூறினார்.
கர்நாடகாவில் அடுத்தகட்ட நடவடிக்கையை திட்டமிட அனைத்து கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் இப்போது தனித்தனியாக ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பான சம்பவங்கள் காரணமாக, சர்ச்சைக்குரிய பசுவதை எதிர்ப்பு மசோதாவின் தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளது.
source: https://tamil.indianexpress.com/india/ruckus-in-karnataka-legislative-council-deputy-speaker-manhandled-video-237360/