Open to talks, but need a more concrete proposal, not just tweaks: Farm unions to Government : டெல்லி எல்லைகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக, புதிதாக கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் விவசாயிகளால் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசிற்கு அவர்கள் அனுப்பியிருக்கும் கடிதத்தில், விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் அரசு உறுதியான திட்டங்களை வழங்க தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ், இந்த கடிதம் குறித்து சிங்கு எல்லையில் பேசிய போது, ”நாங்கள் ஏற்கனவே நிராகரித்த முன்மொழிவுகளைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசி அர்த்தமன்ற திருத்தங்களை அரசு கொண்டு வர முயல்வதை நிறுத்த வேண்டும். ஆனால் எழுத்துப்பூர்வமாக எழுதப்பட்ட உறுதியான முடிவுகளை அவர்களை கொண்டு வந்தால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை விரைவில் துவங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
திறந்த மனதுடன், தூய்மையான நோக்கங்களுடன் அரசின் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். நாங்கள் டிசம்பர் 5ம் தேதியில் இருந்து இதே போன்ற திருத்தங்களை கேட்டுக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் எங்களுக்கு இந்த திருத்தங்கள் வேண்டாம் என்று நாங்கள் ஏற்கனவே அவர்களிடம் கூறி விட்டோம்.
விவசாய கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல சங்க கூடுதல் செயலாளர் விவேக் அகர்வாலுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விவசாய தலைவர்கள் நாங்கள் ஏற்கனவே இந்த திருத்தங்களை நிராகரித்துவிட்டோம். பிறகு அரசிடம் இருந்து வேறெந்த முன்மொழிவுகளும் வரவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ராஷ்ட்ரிய கிசான் மஸ்தூர் மஹாசங்கின் தேசிய தலைவர் சிவ் குமார் கக்கா, நாங்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசிவிட்டோம். நாங்கள் திருத்தங்களை ஏற்றுக் கொள்ள்ள மாட்டோம் என்று அவரிடம் தெரிவித்துவிட்டோம். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தான் நாங்கள் கேட்கின்றோம். ஆனால் அந்த செயல்முறையை அவர்கள் மெதுவாக்குகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அரசுக்கு விவசாயிகள் எழுதிய கடிதத்தில், அரசு எங்களின் போராட்டத்தை அவமதிப்பு செய்ய முயற்சிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
நாங்கள் கொடுத்த முன்மொழிவு ஒரு தலைவர் மட்டும் எடுத்த முடிவா என்று அவர்கள் எங்களிடம் கேட்டனர். நான் கூறுகின்றேன் அவர்கள் எங்களின் நோக்கங்களை உடைக்க முயலுகின்றனர். அவர்கள் ஒரு தீர்வினை விரைவில் எட்ட வேண்டும் என்று பாரதிய கிஷான் சங்க உறுப்பினர் யுத்விர் சிங் கூறினார்.
யாதவ் பேசிய போது அரசு இந்த போராட்டத்தில் பங்கேற்காத மனிதர்கள் மற்றும் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்துகின்றனர். அவர்கள் எங்களின் போராட்டத்தை உடைக்க முயற்சிக்கின்றனர் என்றார். இதற்கு முன்பு அனுப்பிய கடிதங்களுக்கு அரசின் செயல்பாட்டால் விவசாயிகள் மகிழ்ச்சி அடையவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
கிஷான் க்ராந்தி சங்கத்தை சேர்ந்த தர்ஷன் பால் சிங், அனைத்து சங்க தலைவர்கள் சார்பிலும் கடிதம் ஒன்றை மத்திய அரசுக்கு எழுதியுள்ளார். ஒரு நபரின் முடிவு என்று நீங்கள் நினைத்ததை கண்டு நாங்கள் வருத்தமுறுகின்றோம். எங்களின் முடிவு ஒருமித்த கருத்தாகும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வகுப்புவாதத்தை தூண்டுகின்றோம் என்றும் போராட்டத்திற்கான வண்ணங்களை எங்கள் மீது சித்தகரிக்க அரசு முயற்சிப்பதாக விவசாய சங்க தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
கடந்த வாரம், விவசாயிகளுக்கு ஒரு திறந்த கடிதத்தில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், எல்லைகளில் படையினருக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் ரயில்களை நிறுத்துபவர்கள், குறிப்பாக லடாக்கில் இருக்கும் சூழ்நிலை சவாலானதாக இருக்கும் போது, ரயில்களை தடுத்து நிறுத்தும் நபர்கள் விவசாயிகளாக இருக்க முடியாது.
source: https://tamil.indianexpress.com/india/open-to-talks-but-need-a-more-concrete-proposal-not-just-tweaks-farm-unions-to-government-238715/