Halal’ meat against Hinduism, Sikhism, restaurants must specify: South Delhi body : பாஜக கையில் இருக்கும் தெற்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேசனின் நிலைக்குழு உணவகங்களுக்கும், இறைச்சி கடைகளுக்கான பரிந்துரையை கொண்டுள்ளது. இறைச்சி விற்பனை அல்லது அசைவ உணவு விற்பனை மையங்களில் ஹலால் அல்லது ஜாத்கா போன்ற விளம்பர பலகைகளை வைக்க வேண்டியதை கட்டாயமாக்கியுள்ளது.
நிலைக்குழுவின் இந்த பரிந்துரை தற்போது எஸ்.எம்.டி.சி இல்லத்தில் முடிவுகளுக்காக காத்திருக்கிறது. பாஜகவின் கீழே அதுவும் இயங்குவதால் விரைவில் இது விதியாக அறிவிக்கப்படலாம் என்றூ கூறப்பட்டுள்ளது.
இந்து மற்றும் சீக்கிய மதப்படி ஹலால் இறைச்சியை உட்கொள்வது மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அது மதத்திற்கு எதிரானது. அதனை கருத்தில் கொண்டு உணவகங்களுக்கும் இறைச்சி கடைகளுக்கும் இந்த உத்தரவை வழங்க வேண்டும் என்று குழு தீர்மானம் செய்துள்ளது. ஹலால் இறைச்சி அல்லது ஜாத்கா இறைச்சி இங்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை எழுதி பார்வைக்கு வைக்க வேண்டும் என்று எஸ்.எம்.டி.சி. வியாழக்கிழமை அன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ’ஜாத்கா’ முறை என்பது ஒரு விலங்கு ஒரே நேரத்தில் கொல்லப்படுவது, அதே நேரத்தில் ‘ஹலால்’ என்பது, ஒரு நரம்பு வெட்டப்பட்ட பிறகு ஒரு விலங்கின் ரத்தம் மெதுவாக வெளியேற்றப்பட்டு கொல்லப்படுவது.
நிலைக்குழுவின் தலைவர் ராஜ்தத் கெலாத், “ஒருவருக்கு ஜாத்கா இறைச்சி தேவை. ஆனால் அவருக்கு ஹலால் இறைச்சி வழங்கப்பட்டால் அது அவரின் விருப்பதற்கு எதிரானது. எனவே இந்த தீர்மானம் ஹலால் அல்லது ஜாத்கா என்பதை குறிப்பிட வேண்டும் என்பது தான். இரண்டாவதாக நான் ஜாத்கா இறைச்சி விற்பனை செய்ய உரிமம் பெற்று ஹலால் விற்பனை செய்தாலோ, அல்லது ஹலால் உரிமம் பெற்று ஜாத்கா விற்பனை செய்தாலோ, உரிமம் பெறும் போது இந்த விதிமுறை மீறல்கள் அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்” என்று குறிப்பிட்டார்.
தெற்கு டெல்லியில் உள்ள நான்கு மண்டங்களில் அமைந்திருக்கும் 104 வார்டுகளில் ஆயிரக்கணக்கான உணவங்கள் உள்ளன. 90%உணவங்களிலும் அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஹலால் அல்லது ஜாத்கா என்பதை அவர்கள் குறிப்பிடுவதில்லை என்றூ எஸ்.டி.எம்.சி. பேனல் கூறியது. இறைச்சி கடைகளுக்கும் விதி விலக்கு இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதே போன்ற ஒரு முன்மொழிவினை 2018ம் ஆண்டு கிழக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேசன் வெளியிட்டது. அப்போதைய ஈ.டி.எம்.சி. நிலைக்குழு தலைவர் சத்யபால், சில இந்துக்கள் அசைவம் சாப்பிடுவதில்லை. இந்த முடிவு, அவர்களின் மத உணர்வுகள் புண்படாமல் இருக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
2017ம் ஆண்டு எஸ்.டி.எம்.சி. இறைச்சி மற்றும் இறைச்சி தயாரிப்புகளை திறந்த வெளியில் பார்வைக்கு வைக்க கூடாது என்று முன்மொழிந்தது. சுகாதாரம் மற்றும் பார்க்கும் மக்களின் மத உணர்வுகள் பாதிக்கப்படுகிறது என்பதை மேற்கோள் காட்டி இந்த முடிவை அறிவித்தது. ஆனால் கடை உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிறகு இந்த நடவடிக்கை செயல்பாட்டிற்கு வரவில்லை.