வெள்ளி, 18 டிசம்பர், 2020

நாடாளுமன்றம் எவ்வாறு கூட்டப்படுகிறது?

 புதிய வேளாண் சட்டங்களைப் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தில் ஒரு குறுகிய கால் கூட்டத்தொடரைக் கூட்டக் கோரி காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி மக்களவைக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்திற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி “சில எதிர்க்கட்சிகள் தற்போதை தொற்றுநோய் சூழல் குறித்து கவலை தெரிவித்துள்ளன. அதனால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகள்

நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டும் அதிகாரம் அரசாங்கத்திடம் உள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இதில் தற்போது பாதுகாப்பு, உள்துறை, நிதி மற்றும் சட்டம் உள்ளிட்ட ஒன்பது துறைகளின் அமைச்சர்கள் உள்ளனர். இந்த குழுவின் முடிவு குடியரசுத் தலைவரால் முறைப்படுத்தப்படுகிறது. அந்த குழுவின் பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத் தொடரில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் ஒரு நிலையான நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் நாட்காட்டி (காலண்டர்) இல்லை. மரபுப்படி ஒரு ஆண்டில் நாடாளுமன்றத்தில் மூன்று கூட்டத்தொடர்கள் கூடுகிறது. மிக நீளமான அமர்வாக பட்ஜெட் அமர்வு ஜனவரி மாத இறுதியில் தொடங்கி, ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் முடிவடைகிறது. இந்த அமர்வில் ஒரு இடைக்காலம் உள்ளது. இதனால், நாடளுமன்ற குழுக்கள் பட்ஜெட் திட்டங்களை விவாதிக்கும்.

இரண்டாவது கூட்டத்தொடர் 3 வார மழைக்கால அமர்வு ஆகும். இது வழக்கமாக ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைகிறது. நவம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறும் 3 வார கால குளிர்கால கூட்டத்தொடருடன் அந்த நாடாளுமன்ற ஆண்டு முடிவடைகிறது.

மக்களவையின் பொது நோக்கக் குழுவால் 1955ம் ஆண்டில் பொது அமர்வுகள் பரிந்துரைக்கப்பட்டன. அது பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அது செயல்படுத்தப்படவில்லை.

அரசியலமைப்பு கூறுவது என்ன

நாடாளுமன்றத்தின் அழைப்பு அரசியலமைப்பின் 85வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல கட்டுரைகளைப் போலவே, இது 1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் ஒரு விதியின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த விதி, மத்திய சட்டமன்றத்தை ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது கூட்டுவதற்கு வரவழைக்க வேண்டும் என்றும், இரண்டு கூட்டத்தொடர்களுக்கு இடையில் 12 மாதங்களுக்கு மேல் இடைவெளி செல்ல கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்த ஏற்பாட்டின் நோக்கம் வருவாயைச் சேகரிப்பதற்காக மட்டுமே சட்டமன்றத்தைக் கூட்டுவது என்றும், ஒரு வருடத்திற்கு ஒரு முறை கூட்டம் என்பது சட்டமன்றத்தால் அரசாங்கத்தை ஆராய்வதைத் தவிர்ப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். அரசியலமைப்பு சபையில் அவ கூறியதாவது: “சூழல் முற்றிலுமாக மாறிவிட்டது என்று நாம் நினைத்தோம். தனிப்பட்ட முறையில் நானும் நினைக்கிறேன். எந்தவொரு நிர்வாகியும் இனி சட்டமன்றத்தை நோக்கி இந்த வகையான கடுமையான நடத்தையைக் காட்ட முடியும் என்று நான் நினைக்கவில்லை.” என்று கூறியுள்ளார்.

அவருடைய இந்த வரைவு ஏற்பாடு இரண்டு கூட்டத்தொடர்களுக்கு இடையிலான இடைவெளியை ஆறு மாதங்களாகக் குறைத்தது. மேலும், நாடாளுமன்றம் வருடத்திற்கு இரண்டு முறையாவது கூட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், அவர், “அந்த விதிமுறை சட்டமன்ற கூட்டத்தை கூட்டுவதற்கு அழைப்பதை விட சட்டமன்றத்தை அடிக்கடி அழைப்பதைத் தடுக்காது. உண்மையில், எனது பயம் என்னவென்றால், நாடாளுமன்ற கூட்டதொடர்கள் அவ்வப்போது நீண்டதாக இருக்கும் என்று நான் கூறலாம். சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்வுகளில் சோர்வடைந்து போவார்கள்.” என்று கூறினார்.

இந்த விவாதத்தின் போது, ​​அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் மூன்று விஷயங்களை எடுத்துரைத்தனர்: (i) ஒரு வருடத்தில் கூட்டத்தொடர்களின் எண்ணிக்கை (ii) அமர்வு நடந்த நாட்களின் எண்ணிக்கை (iii) நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் யாருக்கு இருக்க வேண்டும்.

பீகாரைச் சேர்ந்த பேராசிரியர் கே.டி.ஷா, ஆண்டு முழுவதும் நாடாளுமன்றம் அமர்வு நடைபெற வேண்டும். இடையில் இடைவெளிகளுடன் கூட்டம் நடைபெற வேண்டும் என்று கருதினார். மற்றவர்கள் நாடாளுமன்றம் நீண்ட காலத்திற்கு கூட்டம் நடைபெற வேண்டும் என்று விரும்பினர். மேலும், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க சட்டமன்றங்களின் உதாரணங்களையும் கொடுத்தனர். அந்த காலத்தில் ஒரு வருடத்தில் நூறு நாட்களுக்கு மேல் கூட்டம் நடந்தது. பேராசிரியர் ஷா இரு அவைகளின் தலைமை அதிகாரிகளுக்கும் சில சூழ்நிலைகளில் நாடாளுமன்றத்தைக் கூட்ட அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினார். இந்த பரிந்துரைகளை டாக்டர் அம்பேத்கர் ஏற்கவில்லை.

பல ஆண்டுகளாக, அரசியல் மற்றும் சட்டமன்ற தேவைகளுக்கு இடமளிக்கும் வகையில் அரசாங்கங்கள் கூட்டத்தொடர்களின் தேதிகளை மாற்றிக்கொண்டன. 2017ல் குஜராத் சட்டமன்றத் தேர்தல் காரணமாக குளிர்கால கூட்டதொடர் தாமதமானது. 2011ல் அரசியல் கட்சிகள் பட்ஜெட் அமர்வைக் குறைக்க ஒப்புக் கொண்டன. இதனால், அவர்கள் ஐந்து மாநிலங்களில் விதான் சபா தேர்தலில் பிரச்சாரம் செய்யலாம்.

அரசாங்கம் அவசரச் சட்டங்களை பிறப்ப்பிதற்கு அனுமதிக்க அமர்வுகள் குறைக்கப்பட்டுள்ளன அல்லது தாமதப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, 2016 ஆம் ஆண்டில், பட்ஜெட் அமர்வு இரண்டு தனித்தனி அமர்வுகளாக பிரிக்கப்பட்டு ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்க உதவுகிறது.

அமர்வுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன – 2008 ஆம் ஆண்டில், இரண்டு நாள் மழைக்கால அமர்வு (இதில் இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக யுபிஏ-ஐ அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டது) டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதை தடுப்பதே அதன் வெளிப்படையான காரணம். அந்த ஆண்டில் இரண்டு அமர்வுகள் மட்டுமே நடந்தன.

குறுகிய நாடாளுமன்ற அவைகள்

பல ஆண்டுகளாக, பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் நாட்களில் சரிவு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் முதல் இரண்டு தசாப்தங்களில், மக்களவை ஆண்டுக்கு சராசரியாக 120 நாட்களுக்கு மேல் கூடியது. இது கடந்த தசாப்தத்தில் சுமார் 70 நாட்களாக குறைந்துள்ளது.

இதற்கு ஒரு நிறுவன ரீதியான காரணம் பாராளுமன்றத்தின் பணிக்குழுவை அதன் நிலைக்குழுக்கள் குறைப்பதே ஆகும். அவை 1990களில் இருந்து சபைக்கு வெளியே விவாதங்களை தொகுத்துள்ளன. இருப்பினும், ஒரு வருடத்தில் குறைந்தது 120 நாட்களுக்கு நாடாளுமன்றம் கூட வேண்டும் என்று பல குழுக்கள் பரிந்துரைத்துள்ளன. காங்கிரஸ் தலைவர் பவன் குமார் பன்சால், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலத்தில், தனது தனி நபர் உறுப்பினர் மசோதாக்களில் இந்த திட்டத்தை முன்வைத்தார். மாநிலங்களவை எம்.பி. நரேஷ் குஜ்ரால், 2017ம் ஆண்டு தனிநபர் உறுப்பினர் மசோதாவில், அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை விவாதிக்க 15 நாட்கள் சிறப்பு அமர்வு உட்பட, ஒரு வருடத்தில் நான்கு அமர்வுகளுக்கு நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

இந்த ஆண்டு, பாராளுமன்றம் 33 நாட்கள் கூடியது. கடந்த முறை நாடாளுமன்றம் 50 நாட்களுக்கும் குறைவாக நடந்தது. 2008-ல் நாடாளுமன்றம் 46 நாட்கள் நடந்தது.