செவ்வாய், 29 டிசம்பர், 2020

வளர்ச்சியை அதிகரிப்பதை விட பணவீக்கத்தை குறைப்பது 2021ம் ஆண்டில் ஏன் சவாலாக இருக்கும்?

 Why containing inflation, instead of boosting growth, could be the bigger challenge for policymakers in 2021 : கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் மக்களின் நடமாட்டம் மற்றும் கொரோனா தொற்று எண்ணிக்கைக்கு இடையேயான சங்கிலியை இந்தியா உடைத்திருப்பதாக தெரிகின்றனர். தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அது போன்ற நிகழ்வுகள் ஏதும் அரங்கேறவில்ல்லை. உண்மையில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை குறைவதோடு, இறப்பவர்களின் விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

கொண்டாட்ட காலங்களில் சேமிப்பை விட அதிக அளவு புதிய பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டியது கடந்த காலாண்டில் வளர்ச்சியின் மேம்பாட்டிற்கு உதவியது.

முதலில் இந்தியா சற்று தடுமாறி மீண்டும் பொருளாதார மீட்புப் பாதையில் பயணிப்பது போன்று தோன்றலாம். குறைந்த அளவிலான செலவினங்கள் இன்ஈக்குவாலிட்டி மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை விட்டுச்செல்லகூடும் என்று எச்.எஸ்.பி.சி. செக்யூரிட்டீஸ் அண்ட் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் தலைமை பொருளாளர் பிரன்ஜூல் பண்டாரி தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் ஏழ்மையான குடும்பங்கள், சிறிய தொழில்கள் போன்று அதிகம் பாதிப்படையக் கூடிய பகுதிகளை நோக்கியே சிறப்பு பொருளாதார உதவி சென்றாலும், நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைகளை கணக்கில் கொள்ளாதது போன்ற தவறுகள் நடந்தன. பின்பு சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு இடையே சமத்துவமின்மை அதிகரித்தது. இதனை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கூட உணர்ந்து கொள்ளும் வகையில் இருந்தது. இவை அனைத்தும் காலப்போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமமற்ற தன்மைக்கு வேறு சில காரணங்களும் கூட இருக்க முடியும். அது பண வீக்கத்தை முடக்கலாம். சேவை பிரிவுகளில் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை இந்தியா கடந்த காலங்களில் கண்டுள்ளது. 2011ம் ஆண்டைப் போலவே இப்போதும் அது போன்ற நிலை தொடர்ந்ததால், இது நீண்ட காலத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விநியோகத்தை அதிகரிக்க நேரம் எடுத்துக் கொள்ளப்படும். சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவை அனைத்தையும் பார்க்கும் போது 2021ல் ஒரு முழு சுழற்சிக்கு இந்தியா வரும். குறைவான வளர்ச்சி அதிக பண வீக்கம் குறித்து சிறுது காலம் கவலை அடைந்தது. ஆனால் வளர்ச்சி அதிகரிக்க துவங்கியதும் பணவீக்கம் குறித்து மீண்டும் கவலை கொள்கிறது.

உண்மையில், பணவீக்கக் கட்டுப்பாடு என்பது 2021 ஆம் ஆண்டில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையாக இருக்கலாம். வங்கித் துறையில் அதிகப்படியான பணப்புழக்கத்தை படிப்படியாகக் குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கலாம், குறுகிய கால விகிதங்களுக்கு ஒரு தளத்தை வழங்கலாம், அவை ஏற்கனவே ரிவர்ஸ் ரெப்போ விகிதத்திற்குக் கீழே உள்ளன, ரிவர்ஸ் ரெப்போ வீகிதத்தை உயர்த்துவதன் மூலம் பாலிசி ரேட் காரிடர் சுருங்க துவங்கும். “தளர்வான நாணயக் கொள்கையிலிருந்து விரைவாக வெளியேறுவது, இந்தியா உலகத்திலிருந்து வேறுபடும் மற்றொரு பகுதியாக மாறும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

source: 

https://tamil.indianexpress.com/explained/why-containing-inflation-instead-of-boosting-growth-could-be-the-bigger-challenge-for-policymakers-in-2021-239473/

Related Posts:

  • மருத்துவக் கட்டுரை அல்ஜைமர் நோய்  டாக்டர் ஜி. ஜான்சன் அல்ஜைமர் நோய் ( Alzheimer Disease ) என்பது நிரந்தரமான நினைவிழத்தல் நோய் எனலாம். இது ஏற்பட்டால், தொடர்ந்து நோய் முற… Read More
  • Jobs From: s.mugair@gmail.com Date: Tuesday, December 31, 2013 Category: Jobs Offered Region: Jeddah (  jeddah  ) Descript… Read More
  • தொழும் போது தொழும் போது பார்வை வானத்தை நோக்கி இருக்கக் கூடாது. திரும்பியும் பார்க்கக் கூடாது. முன்னால் உள்ளவர்களைப் பார்ப்பது தவறில்லை.  'தொழும் போது… Read More
  • Salah Time Jan 2014 Read More
  • கடவுளுக்கு ஆயுதம் தேவையா?  - இந்து கிறித்தவ அன்பர்கள் கவனத்திற்கு....  ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவால் தனக்கு பாதுக்காப்பு அளிக்க இசட் பிரிவு பாதுகாப்பு தேவை… Read More