சனி, 26 டிசம்பர், 2020

ஆழிப்பேரலை;

 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி அன்று உலகத்தையே உலுக்கிய அந்த துயர சம்பவம் அரங்கேறியது. ஆழிப்பேரலை என்று கூறப்படும் சுனாமியால் மக்கள் தங்கள் சொந்தங்கள், உறவுகள், உடமைகள் என அனைத்தையும் இழந்து தவித்தனர்.

இந்தோனேசியாவின் சுமத்ராவிற்கு அருகே கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 9.1 முதல் 9.3 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் 14 நாடுகளை சேர்ந்த கடலோர மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளானர்கள். கிட்டத்தட்ட 30 மீட்டர் உயரத்திற்கு மேலே எழும்பிய அலை மக்களின் இருப்பிடத்திற்குள் புகுந்து லட்சக்கணக்கானவர்களை தன்னுடன் அழைத்து சென்றது.

இந்தியா மட்டும் அல்லாமல், தாய்லாந்து, மாலத்தீவு, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாட்டினரும் பெரும் அவதிக்கு ஆளானர்கள். இந்தோனேசியாவில் மட்டும் ஒரு லட்சத்தி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் சென்னை, நாகை, குமரி போன்ற கடலோர மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளானர்கள். நாகையில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயர சம்பவம் அரங்கேறியது.

ஒவ்வொரு ஆண்டும் சுனாமியால் பாதிக்கப்பட்ட சொந்தங்களை நினைவு கொள்ளும் வகையில் கடலுக்கு சென்று மக்கள் அஞ்சலி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 15 ஆண்டுகளை கடந்த பின்னரும் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை.