சனி, 19 டிசம்பர், 2020

பிட்காயின்

 Explained: Should you invest in Bitcoin : 2017ம் ஆண்டு 20,000 டாலருக்கு நிகரான மதிப்பை அடைந்து வீழ்ச்சி அடைந்த பிட்காய்ன் அமெரிக்க டாலரின் வளர்ச்சிக்கு முக்கியமான தடை என்று அறிவிக்கப்பட்டது. வியாழக்கிழமை அன்று 23 ஆயிரம் டாலருக்கு மேல் வர்த்தகம் ஆனது. கடந்த நான்கு மாதங்களாக நீடித்திருக்கும் இந்த நிலைகளுக்கான பேரணி, பல்வேறு பங்குதாரர்கள் கிரிப்டோகரன்ஸியை நியாயப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. ஒருவர் பிட்காயினில் முதலீடு செய்வதற்கு முன்பு அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவகாரங்களை இங்கே காண்போம்.

பிட்காயின் எப்படி வேலை செய்கிறது?

பிட்காயின் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பான தகவல்கள் தெளிவாக இல்லை. சடோஷி நகமோட்டோவின் அடையாளத்தைக் கொண்ட ஒரு நபர், அல்லது ஒரு குழு, 2008ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு பின்னால் ஒரு கணக்கியல் முறையை நடைமுறைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. நகாமோட்டோ ஒரு பியர் டூ பியர் மின்னணு கேஷ் சிஸ்டம் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது பணத்தை நேரடியாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நிதி துறை வழியே செல்லாமல் செல்வதை உறுதி செய்கிறது. நகமோட்டோ இணை உரிமையாளராக இருக்கும் Bitcoin.org இணையத்தின் படி, பிட்காய்ன் என்பது வாடிக்கையாளர்கள் பார்வையில் ஒரு மொபைல் செயலி தானே தவிர வேறொன்றும் இல்லை. இந்த செயலி ஒரு தனிநபருக்கு வாலெட்டையும் நேரடியாக பிட்காய்ன்களை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கிறது.

பிட்காயின்கள் பொதுவாக பிட்காயின் முகவரியுடன் அடையாளம் காணப்படுகின்றன, இதில் “1” அல்லது “3” என்று தொடங்கி 26-35 எண்கள் மற்றும் எழுத்துக்களாக உள்ளது. இந்த முகவரி யாராலும் அறிந்து கொள்ள முடியாத வகையில் இருக்கிறது. ஆனாலும் இது பிட்காயினின் அல்லது பிட்காயினின் ஒரு பகுதியின் இலக்கை குறிப்பிடுகிறது. முதலில் பிட்காய்ன்கள் அறிமுகமான போது ஃபியட் பணத்திற்கு மாற்றாகவும், உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பணபரிமாற்ற முறையாகவும் செயல்படுவதையே குறிக்கோளாக கொண்டிருந்தது. ஆனால், பிட்காய்னகளின் வளர்ச்சி அதிகரித்த பிறகு பங்கு வர்த்தகம் மூலம் அமெரிக்க டாலர்கள் மற்றும் யூரோவுக்கு மாறாக பிட்காய்ன்களை வாங்கவும் விற்கவும் சில நிறுவனங்கள் பரிமாற்றங்களை நிறுவின. இதற்கு முன்பு கிரிப்டோகரன்ஸியின் ஆதரவாளர்கள் எக்ஸ்ச்சேஞ்ச் நிறுவப்பட்டவுடன் பிட்காய்ன்களின் பலம் அனைத்தும் சென்றுவிட்டது என்று வாதாடினார்கள்.


பிட்காய்ன்கள் பரிவர்த்தனை பதிவு செய்யப்படுகிறதா?

திறந்த லெட்ஜர் மூலம் பிட்காய்ன்கள் பரிவர்த்தனையை அறிந்து கொள்ள ஐடியா ஒன்றை அறிமுகம் செய்தார் நகமோட்டோ. அந்த லெட்ஜர் ப்ளாக்செயின் என்று வழங்கப்பட்டது. பொதுமக்களின் பார்வைக்கும் திறந்த நிலையிலும் இருப்பதால், க்ரிப்டோகரன்சி ஆதரவாளர்கள் இந்த அமைப்பு முறை ஊழலை ஒழிக்கும், சிஸ்டமில் இருக்கும் திறமைக்குறைவை நீக்கும் என்று நம்பினார்கள். ஒரு பாரம்பரிய நிதி ஒப்பந்தத்தில் இரு தரப்பினர் ஃபியட் பணத்தை பயன்படுத்துகிறார்கள். மூன்றாவது தரப்பு (ஏதேனும் ஒரு வங்கி) பணம் உண்மையானது என்பதையும் பரிவர்த்தனைகள் அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது என்பதையும் உத்திரவாதமாக உறுதி அளிக்கிறது. பிட்காயினுடன், சிக்கலான கிரிப்டோகிராஃபிக் புதிர்களைத் தீர்ப்பதன் மூலம் பரிவர்த்தனைகளை அங்கீகரிப்பதில் கணினிகளின் சங்கிலி தொடர்ந்து செயல்படுகிறது. புதிர்களைத் தீர்ப்பதற்கு, இந்த அமைப்புகளுக்கு பிட்காயின்கள் வழங்கப்படுகின்றன. இந்த செயல்முறை பிட்காயின் மைனிங் என்று அழைக்கப்படுகிறது.

ஒருவர் எவ்வாறு பிட்காய்னை பெறுகிறார்?

கம்ப்யூட்டிங் கெப்பாசிட்டி இருந்தால் ஒருவர் மைனிங் மூலமாக பிட்காய்னகளை பெறலாம். எக்ஸ்சேஞ்ச் மூலம் வாங்கலாம், ஓவர் தி கவுண்டர் மூலம் வாங்கமுடியும், ஒருவருக்கு மற்றொருவர் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். பிட்காய்ன்கள் எக்ஸ்சேஞ்சில் ஒருவர் பிட்காய்ன்களை பாரம்பரிய பணம் கொண்டு வாங்கவும் விற்கவும் முடியும். தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்து பிட்காய்ன் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். பிட்காயின் மைனிங்கில் ஈடுபடும் நபர்கள் தான் அந்த பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கின்றார்கள் மேலும் அந்த நெட்வொர்க்கை தங்களின் ஹார்வேரால் பாதுகாக்கவும் செய்கிறார்கள்.
புதிய பிட்காயின்கள் ஒரு நிலையான விகிதத்தில் உருவாக்கப்படும் வகையில் பிட்காயின் நெறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு டெவலப்பருக்கும் தனது இலாபத்தை அதிகரிக்க அமைப்பைக் கையாள அதிகாரம் இல்லை. பிட்காயினின் ஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், 21 மில்லியன் யூனிட்டுகள் மட்டுமே எப்போதும் உருவாக்கப்படும். இருப்பினும், பரிவர்த்தனைகளை ஒரு பிட்காயினின் துணை அலகுகளில் குறிப்பிடலாம். ஒரு சடோஷி என்பது பிட்காயினின் மிகச்சிறிய பகுதியாகும்.

பிட்காயின்கள் விலைகள் உயர்ந்தது எப்படி?

இந்த கரன்சி குறித்து அதிகம் ஆராய்ச்சி செய்பவர்களின் கூற்றுப்படி, கொரோனா நோய் தொற்று உள்ளிட்ட காரணங்களால் பிட்காய்ன்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலக அளவில் பேபால் மற்றும் இந்திய வங்கிகளான எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ, எச்.டி.எஃப்.சி மற்றும் யெஸ் பேங்குகள் போண்றவை தங்களின் சில முடிவுகள் மூலம் கிரிப்டோகரன்ஸிக்கு சட்டப்பூர்வமான தன்மையை வழங்கியது. . எடுத்துக்காட்டாக, இந்த இந்திய வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு நிதியளிக்க தங்கள் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவில், கிரிப்டோகரன்சி தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் தங்கள் அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்ததை தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி 2018ஆம் ஆண்டில் இது போன்ற பரிமாற்றத்திற்கு வங்கிகளுக்கு தடை விதித்தது. இருப்பினும், இந்த உத்தரவுக்கு எதிராக இந்த ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சில ஓய்வூதிய நிதிகள் மற்றும் காப்பீட்டு நிதிகள் தங்கள் இலாகாவின் ஒரு சிறிய பகுதியை பிட்காயின்களில் முதலீடு செய்யமுடிவு எடுத்தது அண்மையில் பிட்காயின் விலைகள் அதிகரித்ததில் மிகப் பெரிய காரணியாக இருக்கிறது. அது நடந்தவுடன், கிடைப்பது விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் ”என்று பிட்காயின் பரிமாற்ற யுனோகோயின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சாத்விக் விஸ்வநாத் கூறினார். எவ்வாறாயினும், விலையைச் சுற்றி ஒரு பபுள் இருக்கும் போது விலைகளில் ஒரு திருத்தம் இருக்கும் என்று விஸ்வநாத் கருதுகிறார், “ஆனால் அது எந்த மட்டத்தில் நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிட்காயின் என்ன முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது?

முதலில் பிட்காய்ன்கள் ஒரு சொத்தாக பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வந்த எக்ஸ்சேஞ்சுகள் அதனை மாற்றியது. பாரம்பரிய முதலீட்டு நிபுணர்கள் பிட்காய்ன் முதலீட்டில் எச்சரிக்கையாக இருந்தார்கள். “நாங்கள் பிட்காயின் முதலீடு குறித்த ஆலோசனைகளை வழங்குவதில்லை. அதன் விலையை இயக்கும் எந்தவொரு அடிப்படையும் அதில் இல்லை, இது பெரும்பாலும் வழங்கல் மற்றும் தேவை மற்றும் தொழில்நுட்ப காரணிகளால் இயக்கப்படுகிறது என்று நினைக்கிறேன், எனவே நாங்கள் எங்கள் ஆலோசனையை வழங்கவில்லை. இது ஒரு மாற்று நாணயம், இது டிஜிட்டல் வடிவத்தில் உள்ளது, அதனை தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும், ”என்று டெல்லியை தளமாகக் கொண்ட நிதி சேவைகள் மற்றும் முதலீட்டு ஆலோசனை நிறுவனமான அசெட் மேனேஜர்களின் நிறுவனர் சூர்யா பாட்டியா கூறினார்.

பிட்காயினின் விலை டிசம்பர் 2017, 18 ஆயிரம் டாலரில் இருந்து டிசம்பர் 2018ல் 3200 டாலர்களாக சரிய துவங்கியது. ஜூலை 2019ல் இது 10 ஆயிரம் டாலராக அதிகரித்தது. பிறகு 5500 டாலராக இந்த ஆண்டு மார்ச் மாதம் குறைந்தது. எந்தவொரு முக்கிய அடிப்படைக் காரணமும் இல்லாமல் விலையில் பெரும் ஏற்ற இறக்கம் இருப்பதால் சில்லறை முதலீட்டாளர்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிட்காய்னகளை கட்டுப்படுத்த முடியுமா?

வர்தகம் மற்றும் முதலீட்டு துறையில் இருக்கும் நபர்கள் பிட்காயின் பின்னால் எந்த சொத்தும் இல்லை என்று கூறுகிறார்கள். அதன் மதிப்பு கற்பன்னையானது. முன்பு முதலீட்டார்கள் சொத்தை பார்க்க முடியும். சில முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்.

கிரிப்டோகரன்சி கட்டுப்படுத்தப்பட்டால், அது நிலையற்ற தன்மையைக் குறைக்கும், மேலும் அதன் ஏற்றுக்கொள்ளல் மற்றும் பணமாக்குதல் எளிதாக்கப்பட வேண்டும். “இப்போது யாருக்கும் இது ஒரு ஊக விஷயமாக இருப்பதால் இதை நீங்கள் யாருக்கும் பரிந்துரைக்க முடியாது. 2018 ஆம் ஆண்டில் விலைகள் 80% வீழ்ச்சியடைந்து இந்த ஆண்டு நான்கு மடங்கு உயர்ந்தது ஏன் என்பது யாருக்கும் தெரியாது. இந்த வகையான ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தயாரிப்பு சிறிய முதலீட்டாளர்களுக்கானது அல்ல, ”என்று கூற விரும்பாத நிதிச் சேவை நிறுவன உயர் அதிகாரி கூறினார்.  எவ்வாறாயினும், பிட்காயின் உலகளாவிய பரவலாக்கப்பட்ட நாணயமாகக் கருதப்படுவதால், அதைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு மத்திய அதிகாரமும் அந்த நோக்கத்தை திறம்பட தோற்கடிக்கும்.

source: https://tamil.indianexpress.com/explained/should-you-invest-in-bitcoin-237784/