சனி, 26 டிசம்பர், 2020

வருமான வரி செலுத்த கடைசி நாள் : தேவையான ஆவணங்கள் என்னென்ன?

 2019-20 நிதியாண்டிற்கான (எஃப்ஒய் 20) உங்கள் வருமான வரி அறிக்கையை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 31- கடைசி நாளாகும். வழக்கமாக ஐ.டி.ஆர் ஐடிஆர் தாக்கல் செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 கடைசி நாளாக நிர்ணையிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக ஜூலை மாதங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், டிசம்பர் 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் உங்கள் ஐ.டி.ஆரை தாக்கல் செய்யவில்லை என்றால், இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், விரைவில் தாக்கல் செய்ய வேண்டியது அவசயமாகும். இருப்பினும், கடைசி நிமிடத்தில் பிழைகளைத் தவிர்க்க உங்கள் ஐ.டி.ஆரை விரைவில் தாக்கல் செய்வது நல்லது. உங்கள் சரியான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய நீங்கள் பொருத்தப்பட வேண்டிய முக்கிய ஆவணங்களின் பற்றி இங்கே பார்க்கலாம்.

Income Tax Return Filing Tamil News: படிவம் 16

சம்பளம் பெறும் நபர்களுக்கு, ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதற்கு படிவம் 16  முக்கிய ஆவணமாகும். ஒரு முதலாளியால் அதன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த ஆவணம், வருமான வரி கழிக்கப்பட்ட அனைத்து சம்பள ஊழியர்களுக்கும் படிவம் 16 வழங்குவதற்கு முதலாளியே பொறுப்பாவார். இந்த படிவத்தில் மூல (டி.டி.எஸ்) சான்றிதழில் கழிக்கப்படும் வரி மற்றும் ஊழியர்கள் அவர்களின் டி.டி.எஸ் பெறுவார்கள்.

பகுதி A மற்றும் பகுதி B என இரண்டு பகுதிகளை கொண்ட படிவம் 16 –ல் பகுதி A என்பது நிதியாண்டில் முதலாளியால் கழிக்கப்படும் வருமான வரியைக் குறிப்பதாகும். அதில் பணியாளரின் நிரந்தர கணக்கு எண் (பான்) விவரங்கள் மற்றும் முதலாளியின் வரி விலக்கு கணக்கு எண் (TAN) ஆகியவை உள்ளன. பகுதி B-ல் ஊழியரின் மொத்த சம்பளத்தில் பிடித்தம் போக மீதி சம்பளம் பற்றிய தகவல் இருக்கும்.

வட்டி வருமான சான்றிதழ்கள்

சம்பளத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தைத் தவிர, ஒரு நபர் பல்வேறு வட்டி முதலீடுகளான வங்கி மற்றும் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைப்பு மற்றும் நிலையான வைப்பு (fixer deposits) போன்றவற்றிலிருந்து வருமானத்தைப் பெறுகிறார். இந்த நிதி நிறுவனங்கள் தங்கள் வைப்புத்தொகையாளர்களுக்கு வட்டி சான்றிதழ்கள் / வங்கி அறிக்கைகளை வழங்குகின்றன. இந்த வருமான வரிச் சட்டம் 80 டி.டி.ஏ இன் கீழ் ஒரு வங்கி / தபால் அலுவலகத்தில் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கிலிருந்து சம்பாதித்த வட்டிக்கு ரூ .10,000 வரை வரி விலக்கு கோரலாம்.

வரி சேமிப்புக்கான முதலீட்டு சான்றுகள்

முந்தைய நிதியாண்டில் குறிப்பிட்ட காலப்பகுதியில் தங்கள் வரி சேமிப்பு முதலீட்டு சான்றுகளை தங்கள் மனிதவள (HR) / கணக்குத் துறையில் (accounts department) சமர்ப்பிக்காத ஊழியர்கள் இப்போது வரி விலக்குகளை கோருவதற்கான ஆதாரத்தை நேரடியாக ஐ-டி துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஆயுள் காப்பீடு (எல்.ஐ.சி) பிரீமியம் செலுத்தப்பட்ட ரசீது, மருத்துவ காப்பீட்டு ரசீது, பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) பாஸ்புக், 5 ஆண்டு எஃப்.டி ரசீதுகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு (ஈ.எல்.எஸ்.எஸ்), வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்தும் சான்றிதழ், நன்கொடை செலுத்தப்பட்ட ரசீது, கல்வி கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை சமர்பிக்கலாம்.

படிவம் 26 ஏஎஸ்

படிவம் 26 ஏஎஸ் என்பது ஐ-டி துறையால் உருவாக்கப்பட்ட வருடாந்திர ஒருங்கிணைந்த வரி அறிக்கையாகும். வருமான வரி வலைத்தளத்திலிருந்து அனைத்து வரி செலுத்துவோரும் தங்கள் பான் கார்டை பயன்படுத்தி எளிதாக பெறலாம். இது சம்பள ஊழியர்களின் டி.டி.எஸ் அளவு மற்றும் நிதியாண்டில் செலுத்தப்பட்ட வரிகள் (சுயதொழில் செய்பவர்கள் அல்லது வணிகர்கள்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் ஐ.டி.ஆரைத் தாக்கல் செய்யும் போது, ​​வரி செலுத்துவோர் தங்கள் படிவம் 26 ஏ.எஸ்ஸைக் குறிப்பிடலாம். மத்திய அரசாங்கத்தின் கருவூலத்திற்கு செலுத்திய வரிகளின் தொகைக்கான ரசீது படிவம் 16 உடன் இணைக்கலாம்.