சனி, 12 டிசம்பர், 2020

இயற்கை விவசாயத்திற்கு மாறும் நீலகிரி; புதிய செயலி அறிமுகம் !

 Innocent Divya launched organic Nilgiris mobile application to promote  organic farming in Nilgiris : தோட்டக்கலைத் துறை சார்பாக வெள்ளிக்கிழமை அன்று (11/12/2020) நீலகிரி மாவட்ட ஆட்சியிர் இன்னசெண்ட் திவ்யா ஆர்கானிக் நீல்கிரிஸ் என்ற செயலியை அறிமுகம் செய்தார். செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டில் இருந்து நீலகிரியை காக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


அடுத்த 2 வருடங்களில் நீலகிரி மாவட்டம் முழுவதும் இயற்கை விவசாய முறைகளில் தேயிலை மற்றும் காய்கறிகளை வளர்க்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் நீலகிரியில் இருக்கும் அனைத்து விவசாயிகளையும் இயற்கை வேளாண் முறைக்கு மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செயலியை பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் நிலத்திற்கு தேவையான இயற்கை உரம் மற்றும் இதர உள்ளீடுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் இந்த வகை விவசாயம் தொடர்பாக மக்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் நிபுணர்களுடன் பேசுவதற்கு ஒரு வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட செயலி ஆங்கிலத்தில் உள்ளது. தமிழ் மொழியுடன் விரைவில் இந்த செயலி அப்டேட் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக மலை தினத்தை முன்னிட்டு நீலகிரி முழுவதும் நேற்று 3000 உள்நாட்டு மரங்கள் நடப்பட்டது.