நீட்தேர்வு கலந்தாய்வில் மோசடி செய்த மாணவி, தந்தை இருவரும் கேரளாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக வழக்கை விசாரித்துவரும் பெரியமேடு காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு கடந்த மாதம் 8 தேதி முதல் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
கடந்த 7-ம் தேதி, கலந்தாய்வில் கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மாணவி தீக்ஷா அளித்த சான்றிதழ்களில் சந்தேகம் எழுந்தது .
அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது, நீட் தேர்வில் 27 மதிப்பெண் பெற்றிருந்த மாணவி தீக்ஷா அதை 610 மதிப்பெண்களாக திருத்தியது தெரிய வந்தது.
இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்ட மாணவி தீக்ஷாமற்றும் அவரது தந்தையும், பல் டாக்டருமான மீது போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், மொபைல் போன் சிக்னல்கள் மூலம் மாணவியின் குடும்பம் தற்போது கேரளாவில் இருப்பது கண்டறியப்பட்டதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருவரையும் கைது செய்ய கேரளாவுக்கு காவல்துறை குழு விரைந்துள்ளது.