மதுரைக்கும் சென்னைக்கும் இடையேயான தேஜஸ் விரைவு ரயிலை வரும் ஜனவரி 4ம் முதல் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், சென்னைக்கும் மதுரைக்கும் இடையேயான தேஜஸ் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை-மதுரை இடையே வாரத்தில் 6 நாட்கள் ( வியாழன் தவிர்த்து) தேஜஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயில் மூலம் சென்னையிலிருந்து மதுரைக்கு ஆறரை மணி நேரத்திற்குள் பயணித்து விடலாம்.
தேஜஸ் விரைவு வண்டிகளில் பயோ கழிப்பறை, தொலைக்காட்சி பெட்டிகள், இலவச இணைய வசதிகள் கொண்டது. சதாப்தி விரைவு வண்டிகளின் கட்டணத்தை விட, தேஜஸ் வண்டியின் கட்டணம் 20% முதல் 30% கூடுதலாக இருந்தது.
இந்நிலையில், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தேஜஸ் ரயில் சேவையை வரும் ஜனவரி 4ம் முதல் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த செய்தி, தென் மாவட்ட மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேஜஸ் விரைவு ரயில் மிக நவீனமான ரயில்களில் ஒன்று என்று தெரிவித்த அவர், “இந்தியாவில் தயாரிப்போம் ” திட்டத்திற்கு அது ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றார்.
பிரதமர் இந்த ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கும் போது, ” தேஜஸ் விரைவு ரயில் மிக நவீனமான ரயில்களில் ஒன்று என்றும், “இந்தியாவில் தயாரிப்போம் ” திட்டத்திற்கு அது ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு” என்றும் தெரிவித்தார்.
இந்திய ரயில்வே நிர்வாக “பூஜ்ஜிய அடிப்படையிலான கால அட்டவணை(Zero Based Timetable)” மூலம் ரயில்வே ஆண்டு வருவாயை ரூ .1,500 கோடிக்கு மேல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மதிப்பிடப்பட்ட கூடுதல் வருவாயை, கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை உயர்த்தாமல் பெற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த கால அட்டவணையின் கீழ், ஒரு வருடத்தில் 50%க்கும் குறைவான பயணிகளுடன் இயங்கும் ரயில்கள் இயக்கப்படமாட்டாது. தேவைப்பட்டால் அந்த ரயில்கள் பிரபலமான ரயில்களுடன் இணைக்கப்படும் என்று இந்திய ரயில்வே முன்னதாக தெரிவித்தது.