புதன், 16 டிசம்பர், 2020

தாகூரின் ‘ஜன கண மன’ பாடல் வரிகளை மாற்றுவதா? : பிரதமருக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்

 

Rabindranath Tagore national anthem :

By: December 15, 2020, 5:45:57 PM

ரவீந்திரநாத் தாகூரின் தேசிய கீத பாடலில் உள்ள சில சொற்களை மாற்றியமைத்து,  சுபாஸ் சந்திரபோஸ் இயற்றிய பாடல் வரிகளை சேர்க்குமாறு பாஜக தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இது, குறுகிய மற்றும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் முயற்சி என்றும் தெரிவித்தார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்“மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி எழுதிய கடிதத்தை உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்திய தேசிய கீதத்தில் உள்ள சில வரிகளை  மறைந்த நேதாஜி மற்றும் ஐ.என்.ஏ-வுடன் தொடர்புடைய பாடல் வரிகள் கொண்டு மாற்றியமைக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று குறிபிட்டார்.

மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரான சவுத்ரி, “தேசிய ஈடுபடு மற்றும் புரிதல் ஆகிய இரண்டிலும் இத்தகைய வாதம் மிகவும் குறுகிய,  சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் முயற்சி. தேசிய கீதத்தின் இசைக்கு பின்னால் இருக்கும் இந்திய தேசியவாதத்தின் நெறிமுறைகளையும், கலாச்சார பாரம்பரியத்தையும் குழிதோண்டி புதைக்கிறது. குருதேவின் பணிகளும், போதனைகளும் காலத்திற்கும், இடத்திற்கும் அப்பாற்பட்டவை. இந்தியாவைப் பற்றிய குருதேவ் எண்ணங்கள் பன்மைத்துவம், மனிதநேயம், உலகளாவிய சகோதரத்துவம், பல்வேறுபட்ட மதங்கள் ஒன்றாக வாழும் சமநிலை ஆகியவற்றை பிரதிபலிக்கிறது ” என்று தெரிவித்தார்.

சுப்பிரமணிய சுவாமி மோடிக்கு எழுதிய கடிதத்தில்,”1950-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி  இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம், தாகூரின் ‘ஜன கண மனா’ பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் யதார்த்தத்தை அது பிரதிபலிக்க வில்லை. ஏனெனில் பாடல் வரியில் ‘சிந்து’ (இப்போது உள்ளது பாக்கிஸ்தானில்) என்ற வார்த்தைகள் உள்ள.  1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக இப் பாடல் பாடப்பட்டது. இந்த பாடல் ருக்காக எழுதப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை ” என்று குறிப்பிட்டார்.

1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரசு மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.

“ஜன கண மனா” பற்றிய சுவாமியின் புரிதல் மிகவும் குறுகியதாக உள்ளது, ஏனெனில் அவர் தற்போதைய இந்தியாவைப் பற்றி வெறும் பிராந்திய புரிதலை எடுத்துக்கொள்கிறார். எனவே அவர் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் “சிந்து” என்ற வார்த்தையை  தவறாக கருதுகிறார். ஆனால் இந்தியா வெறுமனே ஒரு பிராந்திய நிலம் அல்ல. இது எல்லையற்ற பன்மைத்துவத்தை கொண்ட பெருங்கடல் ”என்று சவுத்ரி கூறினார்.

source: https://tamil.indianexpress.com/explained/explaining-an-unusual-sighting-in-the-spiti-cold-desert-237201/