செவ்வாய், 15 டிசம்பர், 2020

சீனாவின் விவசாய முறை எப்படி வறுமையை ஒழிக்க உதவியது?


source https://tamil.indianexpress.com/explained/how-china-style-of-agriculture-reform-helped-reduce-poverty-237036/ 

How China style of agriculture reform helped reduce poverty : இந்திய தலைநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விவசாயிகளின் போராட்டம் இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்களில் பின்னால் இருக்கும் நோக்கத்தை அறிந்துகொள்ள துரிதப்படுத்துகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பல்வேறு சிறப்பு கட்டுரைகள் புதிய வேளாண் சட்டங்களின் நோக்கங்கள் குறித்தும் தற்போதைய இந்திய விவசாயிகளின் நிலை குறித்தும் குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் இருக்கும் விவசாயிகளின் நிலை குறித்தும் வெளியிட்டிருக்கிறது.  பஞ்சாப் மற்றும் ஹரியானா  மாநிலங்களில் வசிக்கும் விவசாயிகள் அதிக அளவில் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்கள்தான் இதற்கு முன்னால் இருந்த கொள்கைகளால் அதிக அளவு பயன் அடைந்த விவசாயிகளும் கூட. தற்போதைய நிலைக்கு காரணமாக இருக்கும் இரண்டு விசயங்கள் குறித்து நாம் இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

முதல் கேள்வி இந்த புதிய சட்டங்களால் விவசாயிகள் பயனடைவார்கள் இல்லையா என்பது தான். இது ஒரு பொருளாதாரம் சார்ந்த கேள்வியாகும். அரசுத்தரப்பால் அதிகம் விவாதிக்கப்பட்ட கேள்வியும் கூட. அரசுத்தரப்பு விவசாயத்துறையை அதிக அளவு சந்தைக்கு உட்படுத்தினால்  அரசு பொருளாதாரம் மீதான அழுத்தம் குறைவதோடு விவசாயிகள் வேளாண் துறை மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும் என்று கூறுகின்றனர். ஆனால் விவசாயிகள் தரப்பு தனியார் நிறுவனங்கள் இந்தத் துறைக்கு வந்தால் தாங்கள் நஷ்டம் அடைவோம் என்று கூறுகின்றனர்

இரண்டாவது மிகவும் அரசியல் சார்ந்தது. சிந்தனைகளை சட்டங்களாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக அரசு உறுதியாக நம்புகிறது. ஆனால் விவசாயிகள் மசோதா சட்டமாக மாற்றப்படுவதற்கு முன்பு போதுமான அளவில் இந்த சிந்தனைகள் குறித்த விவாதங்கள் ஏதும் நடத்தப்படவில்லை என்று கூறுகின்றனர்.

முதல் கருத்தானது சந்தை பொருளாதாரம் செயல்பாடுகளில் இருக்கும் நம்பிக்கையின்மையை பிரதிபலித்து காட்டுகிறது. சந்தைப் பொருளாதாரம் என்பது மக்களாலும் நிறுவனங்களாலும் சுதந்திரமாகவும் தன்னார்வத்துடனும் விலை மற்றும் பொருட்கள் விநியோகத்தை  தீர்மானிக்கும் அமைப்பை மேற்கோள் காட்டுகிறது. இரண்டாவது கருத்து இந்த அரசு செயல்படுவது மீது இருக்கும் அவநம்பிக்கையை சுட்டுகிறது.

சந்தேகங்களின் இரு பகுதிகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன, அதுதான் தற்போதைய பொருளாதாரத்தை மட்டுமல்ல, அரசியல் பொருளாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த முட்டுக்கட்டைகளை உடைப்பதற்கான இறுதி தீர்வு எதுவாக இருந்தாலும், அது அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்களைக் கொண்டிருக்கும்.

நாம் இந்த நிலையை எவ்வாறு எட்டினோம் என்ற கேள்விக்கான பதிலை தேட வேண்டிய நிலை உள்ளது.  விவசாயிகள் ஏன் சந்தை சக்திகளை சந்தேகத்துடனே பார்க்கின்றனர் என்பதையும் கீழே இருக்கும் பகுதிகள் விவரிக்கின்றன.

“The Dragon and The Elephant: Learning from agricultural and rural reforms in China and India” – இன்று 2008ஆம் ஆண்டு செங்கன் ஃபான் (Shenggen Fan) மற்றும் அசோக் குலாத்தி வார இதழ் ஒன்றில் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தனர். இவர்கள் இருவரும் அப்போது சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி மையத்துடன் (International Food Policy Research Institute) தொடர்பில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருநாடுகளின் வளர்ச்சியும் கிட்டத்தட்ட ஒன்று போல் இருந்தாலும் இரண்டு நாடுகளும் தேர்ந்தெடுத்த துறைகள் வெவ்வேறாக இருந்தது. சீனா தங்களின் கிராமப்புற பகுதிகளில் விவசாயத்தில் மறுமலர்ச்சி பணிகளுடன் வளர்ச்சியை துவங்கியது. இந்தியா அதே சமயத்தில் தாராளமயமாக்கல் மற்றும் தயாரிப்பு துறைகளில் சிறப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனால் வெவ்வேறு விகிதங்களில் இருநாடுகளும் வளர்ச்சியை எட்டியது.  அதே போன்று வெவ்வேறு  விகிதங்களில் வறுமை  குறைக்கப்பட்டது என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தனர்.

Farmers gather in large numbers during their protest against the new farm laws, at Singhu border in New Delhi, Sunday, Dec 13, 2020 Express Photo By Amit Mehra

எவ்வாறு?

சீனாவின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்துறை சந்தை மறுமலர்ச்சிக்கு முதல் அடியாக எடுத்துக் கொண்டதன் மூலம் சீனா நாடு முழுவதும் அதன் பலன்களை பரப்புவதை உறுதி செய்தது. மேலும் அந்த கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்த கிடைத்த அரசியல் ஆதரவையும் தக்கவைத்துக் கொண்டது. இதனால் இந்த செயல்பாடுகளால் அதிக அளவு விவசாயிகளுக்கு ஊக்கத்துகை கிடைத்தது, மேலும் வளங்களை பிரிப்பதில் திறம்பட செயல்பட்டனர்.  இது உள்ளூர் உற்பத்தி துறையை பலப்படுத்தியது மட்டுமின்றி போட்டி மிக்க துறையாகவும் மாறியது.

விவசாயத்தின் செழிப்பு காரணமாக ஊர்ப்புறங்களில் உள்ள நிலையான விவசாயம் சாரா துறைகளும் (dynamic rural non-farm (RNF) sector) நன்கு வளர்ச்சி அடைந்தது. விவசாயம் சாரா துறைகளிலும் கிடைக்கப்பெற்ற தொடர் லாபம் காரணமாக அங்கு வறுமை ஒழிப்பு மிகவும் சீராக நடைபெற்றது. ருரல் நான் பார்மிங் செக்டார் எனப்படும் ஊர்ப்புற விவசாயம் சாரா துறைகளின் தொடர் வளர்ச்சியானது நகர்ப்புற வளர்ச்சிக்கான கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கியது. அரசு சொந்தமாக நடத்தும் என்டர்பிரைஸ்களுக்கு சவால் விடும் வகையில் ஊர்ப்புறங்களில் அமைக்கப்பட்டிருந்த விவசாயம் சாராத துறைகள் வளர்ச்சியடைந்தன. அது மேக்ரோ பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. இது பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உதவியது. 1966 முதல் 1977 ஆண்டு வரையில் இருந்த விவசாய துறையின் வளர்ச்சி 78 முதல் 2002 வரையான காலகட்டங்களில் இரு மடங்காக அதிகரித்தது. இதனால்தான் 1978 ஆம் ஆண்டு சீனா மக்கள் தொகையில் இருந்த 33% வறுமை 2001ஆம் ஆண்டு 3 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இதற்கு மாறான நிலையே இந்தியாவில் காணப்பட்டது.  அறுபதுகளின் பிற்பாதியில் துவங்கி ஆயிரத்து 1980களின் வரை இந்தியாவில் வறுமை குறைந்து வந்தது. இது சீர்திருத்த மாற்றங்களால் அல்ல. மாறாக விவசாயத் துறைக்கும் கொடுக்கப்பட்ட வலிமையான கொள்கை சார்ந்த ஆதரவே காரணம்.

இந்தியா இன்றும் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்காக மாநில உணவு கொள்முதல் மற்றும் விநியோகத்தை தொடர்ந்து வருகிறது. இந்த மக்களில் பெரும்பாலானோர் ஏழைகள் மற்றும் விவசாய துறை சார்ந்தவர்கள் தங்களின் வருமானத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் விவசாயத்தையே பெரிதும் நம்பி இருக்கின்றனர் என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டது.

இந்த 2 யுக்திகளுக்கும் இடையே மாறுபாடும் காரணியாக இருப்பது என்ன?

நிச்சயமாக, சீனா மாதிரியை இந்தியா வெறுமனே பிரதிபலித்திருக்க முடியும் என்பது யாருடைய நோக்கமும் இல்லை. சீனாவுக்கு மிகவும் சாதகமான ஆரம்ப நிலைமைகள் இருந்தன என்பதையும் நாம் கவனிக்க வேண்டியது அவசியம் – 1970 ல் கூட, சுகாதாரம், கல்வி, நிலத்திற்கு அதிக சமத்துவ அணுகல் மற்றும் மின் துறையின் வளர்ச்சி ஆகியவையாக இருந்தாலும், இந்தியா மீது சீனா ஒரு குறிப்பிடத்தக்க விளிம்பைக் கொண்டிருந்தது. “சீன கிராமப்புற மக்கள் மீது தனியார் மற்றும் பொருளாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், சீர்திருத்தங்களுக்கு முன்பே சீனா ஒரு நிலையான வளர்ச்சியை அடைந்திருக்க முடியும்” என்றும் அது விளக்குகிறது.

இந்த சூழலில் பார்க்கும் போது, குறைந்த பட்ச ஆதரவு விலை அமைப்பின் முழு சிக்கலும் குறைபாடுள்ள ஊக்கத் தொகையாக உள்ளது. தடையற்ற சந்தைகள் விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரித்து தரும் என்ற தர்க்கம் இருந்த போதிலும் கூட, குறைந்த பட்ச ஆதரவு விலையை ஒரே இரவில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கைவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது. அரசே சந்தைகளை உருவாக்கி இருக்க வேண்டும். சந்தை சக்திகள் குறித்து அறிந்து கொள்ள விவசாயிகளுக்கு நேரம் கொடுத்திருக்க வேண்டும்.

நீங்கள் ஒரு கணம் விவசாயத்தில் இருந்து விலகி மற்ற துறைகளில் உள்ள கொள்கைகளை காண நேரிட்டால் அங்கும் கொள்கைகள் அதே பிரச்சனைகளால் பாதிப்பதை நீங்கள் அறியலாம். உள்நாட்டு நிறுவனங்களை சந்தைப் போட்டிகளில் இருந்து பாதுகாக்கவே இந்தியாவின் உற்பத்தி துறையை ஊக்குவிக்க உற்பத்தி பொருட்களுக்கான ஊக்கத்தொகையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி தடைகள் மற்றும் அதிக இறக்குமதி கட்டணங்களை நியாயப்படுத்தும் கொள்கைகளும் அப்படித்தான். உள்நாட்டு நிறுவனங்களை சந்தை சக்திகளிடமிருந்து பாதுகாக்கிறது என்று இதேபோல், RCEP க்கு வெளியே இருக்க இந்தியாவின் முடிவும் இதே கருத்தினால் உந்தப்படுகிறது. திவாலா நிலை மற்றும் திவால் நிலைக் குறியீட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவது மீண்டும் அடிப்படையில் சந்தை சக்திகளை ஏற்கனவே உள்ள விளம்பரதாரர்களை காயப்படுத்த விடாத விசயமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே விவசாயப் பொருட்களின் பெரும் பகுதி தனிப்பட்ட முறையில் வர்த்தகம் செய்யப்பட்டதாக தரவுகள் கூறுகிறது. சந்தை பொருளாதாரம் செயல்பட ஊக்கத்தொகை மற்றும் நிறுவனங்களை உருவாக்குவதே இந்தியாவின் முக்கியமான அக்கறையாக இருக்க வேண்டும். ஏன் என்றால் ஆழமான சந்தேகங்களை தீர்ப்பதற்கான நிலையான முடிவுகள் அங்கு தான் உள்ளது.

விவசாயிகள் போராட்டத்தை தாண்டி, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு ( National Family Health Survey (NFHS-5)) தரவுகள் இந்த வாரம் மற்றொரு முக்கியமான விவாதத்தை முன் வைக்கும் என்று எதிர்பார்க்கலாம். அந்த தரவுகளில் பெரும்பாலான இந்திய மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு (2015 -2019 ஆண்டுகளில்) ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிக அளவில் ஏற்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. இது மோடியின் ஆட்சியில் முதல் ஐந்து ஆண்டுகளாகும். ரிசர்வ் வங்கியின் பணவீக்க-இலக்கு கட்டமைப்பு தொடர்பாக மேலும் ஒரு புதிய விவாதம் உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது.

அதுவரை, பாதுகாப்பாக இருங்கள்

உதித்