சனி, 19 டிசம்பர், 2020

திமுக கூட்டணி உண்ணாவிரதம்: ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை

 


மத்திய அரசின் வேளான் சட்டங்களுக்கு எதிராக  டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் திமுகவினர் கூட்டணி கட்சிகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் 21-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதராவாக கடந்த 9-ந் தேதி நாடு முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், டெல்லி விவசாயிகள் சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒருநாள் உண்ணா விரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், இந்த போராட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும்  திட்டமிட்டபடி இந்த போராட்டம் நடைபெறும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 8 மணிக்கு சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய இந்த போராட்டத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளக் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். மேலும் திமுக எம்பி கனிமொழி, எம்பி திருமாவனவன், மதிமுக பொதுசெயலாளர் வைகோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

மத்திய அரசு கார்ப்ரேட் கம்பனிகளுக்காக  ஆதரவாக செயல்படுகிறது. விவசாய சட்டங்களை கொண்டுவருவதற்கு முன் விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் என கூறியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், வேளாண் சட்டங்களை திரும்ப பெறும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்.

18/12/2020 தொடர்ந்து இந்த போராட்டத்தில் பேசிய திமுக துணை பொதுசெயலாளர் பொன்முடி, வேளாண் சட்டத்திற்கு ஆதராவாக போராட்டத்தின் மூலம் தலைவர் ஸ்டாலின் அனைவரையும் ஒன்றினைத்துள்ளார். நிச்சயம் தமிழகத்தில் அடுத்த முதல்வர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்பதை தமிழகமக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மாலை 5 மணிரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் கொரோனா அச்சுறுதுதல் காரணமாக, அனைவரும் பச்சை நிறத்தில் முககவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.