வியாழன், 17 டிசம்பர், 2020

கேரளா உள்ளாட்சி தேர்தல் முடிவு பினராயி விஜயனுக்கான வெற்றி ஏன்?

 கேரளா உள்ளாட்சி தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை முடிவை நோக்கி வருவதால் ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) அம்மாநிலத்தில் உள்ள கிராமம் ஊராட்சி, ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்துகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி அமைப்புகளில் தெளிவான வெற்றியைப் பெற்றுள்ளது. கேரளாவில் 2015ம் ஆண்டில் பெரும்பான்மையான உள்ளாட்சி அமைப்புகளை வென்ற எல்.டி.எஃப், தற்போதுள்ள எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொள்ளவோ ​​அல்லது அதன் எண்ணிக்கையை மேலும் மேம்படுத்தவோ தயாராக உள்ளது.

பினராயி விஜயனின் வெற்றி

அரசாங்கம் மற்றும் கட்சியின் தனி முகமாக விளங்கிய முதல்வர் பினராயி விஜயனுக்கான பெரிய வெற்றி எல்.டி.எஃப் இன் மிகப்பெரிய எழுச்சி ஆகும்.

2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பினராயி விஜயன் பின்னடைவை சந்தித்தபோது, ​​எல்.டி.எஃப் 20 இடங்களில் ஒரு இடத்தை மட்டுமே வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தல்கள் வேறானவை. 6 மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள கேரளா சட்டமன்றத் தேர்தலுக்கு தலைமை தாங்கும் அவரது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகளாக இது பார்க்கப்படுகிறது.

பினராயி விஜயன் அரசும் சிபிஐ (எம்) கட்சியும் ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில் பயணிக்கும் நேரத்தில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்கள் நடத்தப்பட்டன. கேரளாவில் நிலவும் அரசியல் நிலைமை, தங்கக் கடத்தல் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும் விஜயனுக்கு எதிர்மறையாக அமைந்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் கூட தனது மகன் போதைப்பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் கட்சி பதவியிலிருந்து விலக வேண்டிய கட்டாயப்படுத்தப்பட்டார்.

முதல்வர் அலுவலகம் மற்றும் அரசு மீது எதிர்க்கட்சி கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ள நிலையில், பினராயி விஜயன் வேறு பாதையில் சென்றுள்ளார். தேர்தலின் போது அவரது கவனம் அரசாங்கத்தின் சாதனைகள், குறிப்பாக அவரது ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் ஏழைகளுக்கான வீடுகள் உட்பட பல அடிமட்ட அளவிலான தலையீடுகளில் இருந்தது.

பினராயி விஜயன் மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் உள்ளூர் வளர்ச்சியிலும் அரசாங்கத்தின் தலையீடுகளை எடுத்துக்காட்டுவதன் மூலம் வாக்காளர்களுடன் ஒரு விருப்பத்தை ஏற்படுத்த முடிந்தது. இது முதல்வர் அலுவலகத்துக்கு எதிராக எழுப்பப்பட்ட தங்கக் கடத்தல் ஊழல் மற்றும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் வாக்காளர்களிடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது.

கேரள காங்கிரஸ் (எம்) மூலம் மத்திய கேரளாவைப் பெறுதல்

சிபிஐ (எம்) கட்சி, காங்கிரஸ் கட்சியின் நீண்டகால கூட்டணி கட்சியான கேரளா காங்கிரஸ் (எம்)-ஐ எல்.டி.எஃப் கூட்டணிக்கு கொண்டு வந்த பின்னர் நடந்த முதல் தேர்தல் இது. ஜோஸ் கே மணி தலைமையிலான மாநில கிறிஸ்தவ கட்சியான கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியை எல்.டி.எஃப்-க்குள் கொண்டுவந்ததன் பின்னணியில் விஜயன் சூத்ரதாரியாக இருந்தார்.

கேரளா காங்கிரஸ் (எம்)-ஐ கட்சியை அரசியல் முன்னணியில் ஒரு எடுத்துக் கொண்டால், எல்.டி.எஃப்-இன் இரண்டாவது முன்னணி கூட்டணி கட்சியான சிபிஐயின் எதிர்ப்பைத் தூண்டியது. ஆனால், எல்.டி.எஃப்-க்குள் இருந்து எழுந்த அத்தகைய எதிர்ப்பை விஜயனால் அமைதியாக்க முடிந்தது. கே.சி (எம்) கட்சி அதிக செல்வாக்கு உள்ள கோட்டயம், இடுக்கி மற்றும் பத்தனம்திட்டாவில் யு.டி.எஃப்-ன் பல பாரம்பரிய கோட்டைகளை வென்றதால், இந்த நடவடிக்கை விஜயனின் நடைமுறை அரசியலுக்கு மற்றொரு சான்றாக மாறியுள்ளது. இந்த முடிவுதான் வெற்றியை அளித்ததாகத் தோன்றியதால், விஜயன் எல்.டி.எஃப்-க்குள் தனது செல்வாக்கை மேலும் பலப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது.

மதச்சார்பற்ற அரசியலை முன்னிலைப்படுத்துதல்

உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் சிபிஐ (எம்) கேரளாவில் மதச்சார்பற்ற அரசியலின் பாரம்பரியத்துக்காக போட்டியிடுவதைக் காட்டியது. இது அம்மாநிலத்தில் எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கு எப்போதும் முக்கியமாகும். ஜமாத்-இ-இஸ்லாமி நலக் கட்சி (WPI) உடன் தேர்தல் புரிந்துணர்வுக்கு செல்ல காங்கிரஸ் எடுத்த முடிவு, யு.டி.எஃப் வகுப்புவாத சக்திகளுடன் ஒத்துழைக்கிறது என்பதைக் காட்ட சிபிஐ (எம்) க்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தது. அந்த பிரச்சாரம், 2018ல் சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவது தொடர்பாக எல்.டி.எஃப்-ல் இருந்து விலகிச் சென்ற இந்து வாக்காளர்களில் ஒரு பகுதியை விஜயன் திரும்பப் பெற உதவியது. மேலும், கிறிஸ்தவர்களில் ஒரு பகுதியினர், குறிப்பாக கத்தோலிக்க சமூகம் யு.டி.எஃப் அரசியலில் முஸ்லீம் அமைப்புகளுக்கு மேலதிகமாக குரல் எழுப்பியுள்ளது. இதை எல்.டி.எஃப் தேர்தலில் முன்னிலைப்படுத்தியுள்ளது.