Madras HC quashed TN govt’s quota to Vanniyars : மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் இடம் பெற்றுள்ள வன்னியர்களுக்கு தமிழக அரசு வழங்கிய 10.5% சிறப்பு உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து அறிவித்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்த சட்டம் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறிய நீதிமன்றம், தல் நகர்வை மேற்கொண்ட முந்தைய அதிமுக மற்றும் அதைச் செயல்படுத்திய திமுக ஆகிய இரண்டும் அளவிடக் கூடிய தரவுகள் ஏதும் இன்று எவ்வாறு இந்த இடஒதுக்கீட்டை ஆதரித்தன என்ற கேள்வியையும் எழுப்பியது.
இந்த இரண்டுக் கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இந்த ஒதுக்கீட்டிற்கு ஏன் முக்கியத்துவம் தந்தனர்?
முந்தைய ஆளும் கட்சியான அதிமுகவுக்கு சட்டமன்ற தேர்தல் மற்றும் தற்போதைய ஆளும் கட்சியான திமுகவுக்கு உள்ளாட்சி தேர்தல் என இவ்விரண்டு தேர்தல்களையும் கருத்தில் கொண்டு வன்னியர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டை அமல்படுத்த இருக்கட்சிகளும் முடிவு செய்தன.
நியாயமான தரவு அல்லது சாதி வாரியான அடிப்படை தரவுகள் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சாதகமாக ஆதரவு தருவதற்கு எதிராக இரு கட்சியினருக்கும் உள்ளே வலுவான சட்ட மற்றும் அரசியல் கருத்துகள் இருந்தாலும், இதனை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று இருக்கட்சியில் இருந்தும் பேசிய தலைவர்கள் குறிப்பிட்டனர்.
சட்ட ரீதியான கருத்துகள் உள்ளன. அதனால் இந்த ஒதுக்கீடு முடிவுக்கு கொண்டு வரப்படும். ஆன்னாலும் அவர்களுக்கு ஏதாவது நாங்கள் செய்தாக வேண்டும் என்பது தான் எங்களுக்கு முக்கியமானது என்று அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். சிறுபான்மையினர், தலித்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களையும் கவனமாகக் கையாளும் திமுகவைப் பொறுத்தவரையில், மறுப்பு அணுகுமுறையால் அந்த சமூகத்தை ஆளுங்கட்சிக்கு எதிராக மாற்றியிருக்கும் என்றாலும் கூட, அந்த உத்தரவை செயல்படுத்தில் நஷ்டம் ஏதும் இல்லை என்று மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
இது போன்ற ஒரு சிறப்பு உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், பொது பார்வை, நாம் என்ன செய்தோம் என்பதே பதிவாகிறது. தற்போது குற்றம் நீதிமன்றத்தின் கீழே விழுகிறது தவிர அதிமுகவின் மீதோ, திமுகவின் மீதோ இல்லை என்று ஒரு தலைவர் கூறினார்.
வன்னியர் சமூகத்தால் ஆதரிக்கப்படும் கட்சியாக பார்க்கப்படும் ராமதாஸின் பாமக, இட ஒதுக்கீடு கோரிக்கையில் முன்னணியில் இருந்த போதும், அரசாங்கத்திடம் இருந்து நல்ல அனுகூலங்களைப் பெற்ற போதும் கூட அவர்களால் குறிப்பிடத்தக்க பலன்களைப் பெற இயலவில்லை.
மாறிவரும் அரசியல் சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதரவு இருந்தாலும் இல்லாமல் போனாலும் கூட சிறிய கட்சிகள் தங்களின் அடையாளங்களை விட்டுச் செல்வது கடினமாகியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற திமுக அல்லது அதிமுக போன்ற பலம் வாய்ந்த கட்சிகளின் அடையாளம் சிறிய கட்சிகளுக்கு தேவை என்பதும், நீதிமன்றத்தின் முன் தோல்வி அடையும் நிலை உருவாகும் என்று தெரிந்தும் வன்னியர்களுக்கு தாங்கள் ஏதாவது செய்தோம் என்பதை இருக்கட்சிகளும் உறுதி செய்வதும் அவசியமாகிறது.
வன்னியர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள்?
தேவர்கள் மற்றும் கவுண்டர்கள் போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த சமூகங்களாக பார்க்கப்பட்டாலும், வன்னியர்கள் 1940கள் மற்றும் 1950 களில் இருந்து அரசியல் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் முக்கியத்துவம் செலுத்திய பெரிய மற்றும் ஒருங்கிணைந்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளில் ஒரு இனம்.
சமூகப் பிரதிநிதித்துவத்திற்கான பேரம் பேசும் அரசியல் நடவடிக்கையிலும், வன்னியர்கள் பிற பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை விட பல ஆண்டுகளாக முன்னிலையில் இருக்கின்றன. 1980களின் நடுப்பகுதியில் பிரத்தியேகமாக மாநிலம் மற்றும் மத்திய அரசு பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்தினார்கள்.
இந்த போராட்டத்திற்கு முன்பும் கூட மிகவும் பின்னடைவான சமூகமாக இல்லை. மிகவும் பலம் வாய்ந்த இனமாக இருந்த இவர்கள் இந்த போராட்டங்களுக்கு முன்பே அரசியல் அதிகாரங்களை அனுபவித்து வந்தனர். எஸ்.எஸ். ராமசுவாமி படையாச்சியார், எம்.ஏ. மாணிக்கவேலு நாய்க்கர் ஆகியோரின் கட்சி 1950களில் 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை சட்டமன்றத்தில் வைத்திருந்தது.
தமிழ்நாட்டின் கிராமப்புற சமூக-பொருளாதார நிலைமைகள் என்று வரும்போது வன்னியர்களை விட அதிக கவனம் செலுத்த வேண்டிய சமூகங்களாக கள்ளர்களும் நாடார்களும் பார்க்கப்பட்டாலும் 80களில் நடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்களும், அவர்கள் எழுப்பிய கோரிக்கைகளும் வன்னியர்களுக்குப் பயனளித்தன.
இவர்களுக்கான சிறப்பு உள் ஒதுக்கீடு மாநிலத்தின் சமூக நீதிக்கான மதிப்பில் ஏன் தீங்கு விளைவித்தது?
திமுக மற்றும் அதிமுகவின் சிறப்பு ஒதுக்கீட்டுக்கு ஆதரவான அரசியல் முடிவு வெறும் தேர்தல் ஆதாயங்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தால் அவை இதற்கு முன்பு தாழ்த்தப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை தடம் புரள வைக்கும் ஒன்றாக உருவாகியிருக்கும்.
1951ம் ஆண்டு தமிழகத்தில் 25% இட ஒதுக்கீடு ஓ.பி.சிக்கும், 16% இட ஒதுக்கீடு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர்க்கும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, கருணாநிதி தான் முதன் முதலாக ஓ.பி.சிக்கான இட ஒதுக்கீட்டை 30% ஆக அறிவித்தார். எஸ்.சி. மற்றும் எஸ்.டிக்கான இட ஒதுக்கீடு 18% ஆக உயர்த்தப்பட்டது. 1989ம் ஆண்டு எம்.பி.சிக்காக 20% இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது.
பி.சி.க்கு (இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்கள் உட்பட) 30%, எம்.பி.சிக்கு 20%, எஸ்.சிக்கு 18% மற்றும் எஸ்.டி.க்கு 1% என மாநிலத்தின் தற்போதைய இடஒதுக்கீடு 69% ஆகும்.
20% எம்பிசி ஒதுக்கீட்டில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டுடன் ஒரு சமூகத்தை மட்டும் ஆதரிப்பதன் மூலம் இந்த தனித்துவமான சமூக நீதி முறைக்கு எதிராக மாநிலத்தின் இரண்டு சக்திவாய்ந்த அரசியல் கட்சிகள் முடிவு செய்தபோது, எம்பிசி பிரிவில் 115 சமூகங்கள் மீதமுள்ள 9.5% இட ஒதுக்கீட்டைப் பகிர்ந்து கொள்ள விடப்பட்டன.
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் 1970ம் ஆண்டு சட்டநாதன் ஆணையம் சமர்பித்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணைய அறிக்கையின் படி செங்கல்பட்டு, தென் ஆற்காடு, வட ஆற்காடு, சேலம், தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய வடமாவட்டங்களில் வன்னியர்களின் மக்கள் தொகை அதிகம். தென் மாவட்டங்களில் இவர்களின் மக்கள் தொகை மிகக் குறைவாக இருந்தது.
மாநிலம் முழுவதும் வன்னியர் சாதியினருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால், அது மற்ற எம்.பி.சி. பிரிவினர் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் போது குறிப்பிட்டது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வன்னியர்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் எந்தப் போட்டியும் இல்லாமல் தானாகவே கல்வி நிறுவனங்களிலோ அல்லது அரசு வேலையிலோ தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மறுபுறம், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட நபர்களுக்கு இடஒதுக்கீடு 20 சதவீதத்தில் இருந்து 9.5 சதவீதமாகக் குறைக்கப்படுவதால், கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் சேர்க்கை பெறுவதில் சிரமம் ஏற்படும் என்றும் நீதிமன்றம் கூறியது.
source https://tamil.indianexpress.com/explained/who-are-the-vanniyars-and-why-did-madras-hc-quash-tn-govt-quota-to-them-364119/