புதன், 3 நவம்பர், 2021

இந்த டெக்னிக் தெரியுமா? மாதுளம்பழத்தை ஒரு நிமிடத்தில் ஈஸியாக உரிக்கப் பழகுங்க!

 

பழங்களில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் மனிதனுக்கு பல வகைகளில் ஆரோக்கியத்தை வழங்குகிறது. தினமும் பழங்கள் சாப்பிடும்போது அன்றைய தினம் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம் என்று பலரும் கூறுவது உண்டு. அந்த அளவிற்கு பழங்களில் இருந்து நமக்கு ஏராளமான நன்மைகள் உள்ளது. இந்த பழங்களில் முதன்மையானதாக் இருப்பது மாதுளை.

உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய ஆதராமான இரத்த சுத்திகரிப்புக்கு மாதுளை ஒரு இன்றியமையான பலனை அளிக்கிறது. மாதுளையில் அதிகளவு இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கியுள்ளது. இது உடலில் ஏற்படும் மூட்டுவலி, எலும்பு வலி கீழ்வாதம் என பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மாதுளை பழத்தில் ஆண்டிபயோடிக் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கர்ப்பகாலத்தில் பெண்கள் மாதுளை பழத்தை சாப்பிடும்போது தொப்புள் கொடி பாதுகாப்பிற்கும், ஆக்ஸிஜனேற்ற பண்புகளை அதிகரிக்கவும் உதவும். மாதுளையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கவும், இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

இப்படி பல மருத்துவ நன்மைகளை கொண்டுள்ள மாதுளையை உரிப்பதற்கே சிலர் பெரிய முயற்சி மேற்கொள்ள வேண்டி இருக்கும். அதிலும் ஒரு சிலர் மாதுளையை உரிப்பதற்கு யோசித்து அதனை வாங்குவதையே தவிர்த்து விடுகின்றனர். ஆனால் மாதுளையை உரிப்பதற்கும் எளிமையான ஒரு வழி உள்ளது. இந்த வழியை நீங்கள் பயன்படுத்தினால் எளிமையான முறையில் மாதுளையை உரிக்கலாம்.

முதலில் மாதுளையில் முனைப்பகுதியை மாதுளை சிகப்பு நிறத்தில் நன்றாக தெரியும் அளவிற்கு வெட்டி விட வேண்டும். அதன்பிறகு அதில்  பாகங்களுக்காக இடைவெளி தெரியும். இந்த இடைவெளியில் கத்தியை வைத்து தோலை மட்டும் வெட்ட வேண்டும். 3 அல்லது 4 இடங்களில் தெரியும் அந்த பாகத்தில் உள்ள தோலை வெட்டிவிட்டு, பழத்தை பிந்தால் மாதுளை 4 பாகஙகளாக உரிந்துவிடும்.

அதன்பிறகு அதில் உள்ள மாதுளை விதைகளை தனியாக எடுத்து சுவைக்கலாம். மாதுளையை உரிப்பதற்கான சிரமத்தை நினைத்து இந்த பழத்தை மிஸ் செய்துவிடாதீர்கள். மாதுளை பல வகைகளில் நமக்கு சிறந்த நன்மைகளை வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

source https://tamil.indianexpress.com/lifestyle/tamil-health-pomegranate-benefits-update-and-how-to-peel-363809/


Related Posts: