புதன், 3 நவம்பர், 2021

நீட் தேர்வு முடிவுகள்; சிபிஎஸ்இ அல்லாதவர்களின் எண்ணிக்கை உயர்வு

 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, எப்போதும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது என்ற கருத்துக்கு மாறாக, இந்த ஆண்டு முடிவுகளின் பகுப்பாய்வு, தேர்வில் தகுதி பெற்றவர்களின் பட்டியலில் 13 பிற வாரியங்களின் மாணவர்கள் 50% க்கும் அதிகமாக தகுதிப்பெற்றுள்ளனர்.

மேலும், தேர்வில் தகுதி பெற்ற மொத்த 8.7 லட்சம் மாணவர்களில், 66.5% பேர் சிபிஎஸ்இ அல்லாத மாநில வாரியங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால், முதல் இரண்டு லட்சத்தில் சிபிஎஸ்இ அல்லாதவர்களின் தகுதி சதவீதம் வெறும் 39% மட்டுமே.

அதேநேரம், ஒன்பது வாரியங்களில் 10% க்கும் அதிகமான மாணவர்கள் முதல் ஒரு லட்சம் தகுதி வாய்ந்த மாணவர்களில் இடம் பெற்றுள்ளனர். தகுதி பெற்ற முதல் ஒரு லட்சம் மாணவர்களில் ராஜஸ்தான் வாரியம் 19.8% உடன் முன்னணியில் உள்ளது, அடுத்து ஒடிசா (14.9%), CBSE (14.5%).

மாநில வாரியாக ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் 1-10,000 தரவரிசையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்டுள்ளன. ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களின் 6,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் 1-1,00,000 வரையிலான தரவரிசையில் உள்ளனர். தகுதி சதவீதம் குறைந்துள்ள மற்ற 18 மாநிலங்களுடன் தமிழ்நாடும் உள்ளது. இருப்பினும், தமிழ்நாடு முதல் ஒரு லட்சம் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கையில் எப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

மொத்தத்தில், ஒன்பது மாநிலங்கள் 60% மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதிகளைப் பதிவு செய்துள்ளன, டெல்லியில் அதிகபட்சமாக 76.6% ஆகவும், அதைத் தொடர்ந்து சண்டிகர் (75%) ஆகவும் உள்ளது. 1 லட்சம் மாணவர்கள் அல்லது 50%க்கு மேல் தகுதி பெற்ற மாநிலங்களில் கர்நாடகா (57.6%), கேரளா (58.9%), ராஜஸ்தான் (66.2%), தமிழ்நாடு (54.4%) மற்றும் உத்திரபிரதேசம் (53.8%) ஆகியவை உள்ளது. மகாராஷ்டிராவில் 45.9% உடன் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தகுதி பெற்றுள்ளனர்.

தெலுங்கானா (63.1%), AMU (84.6%), மேற்கு வங்கம் (55%), ராஜஸ்தான் (61.8%), மிசோரம் (50.5%), கேரளா (54.2%), ஜம்மு & காஷ்மீர் (56.5%), ஹரியானா (54.8%), குஜராத் (58.2%), கோவா (52.7%), CISCE (71.7%), CBSE (73.9%) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (64.5%) ஆகியவை மொத்த தகுதி பெற்றவர்களில் 50% க்கும் அதிகமான கொண்ட 13 வாரியங்கள்.

இந்த ஆண்டு நீட் தேர்வின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டிய வாரியங்களில் கோவா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மற்றும் மணிப்பூரைத் தவிர மற்ற வடகிழக்கு மாநிலங்களும் அடங்கும். கர்நாடகா, பீகார், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களின் வாரியங்களின் செயல்திறன் குறைந்துள்ளது.

முதல் ஒரு லட்சம் தகுதி பெற்றவர்களில் தலா 10% க்கும் அதிகமான ஒன்பது வாரியங்கள், AMU (28.1%), ராஜஸ்தான் (19.2%), ஒடிசா (14.9%), CBSE (14.5%), CISCE (14.3%), மேற்கு வங்கம் (13.7%), பீகார் (10.9%), ஆந்திரப் பிரதேசம் (10.7%) மற்றும் ஹரியானா (10.6%).

ஜார்கண்ட் (3.9%), மகாராஷ்டிரா (6.7%), தமிழ்நாடு (4.6%), திரிபுரா (7.5%) மற்றும் மேற்கு வங்காளம் (1.6%) உட்பட, 13 வாரியங்கள் 2019 ஆம் ஆண்டு முதல் தகுதி சதவீதத்தை மேம்படுத்தி உள்ளன. அஸ்ஸாம், கோவா, ஜம்மு & காஷ்மீர் மற்றும் திரிபுரா ஆகியவை ஐந்து சதவீத புள்ளிகளுக்கு மேல் தங்கள் தகுதியை மேம்படுத்திய வாரியங்கள். குஜராத், மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய நான்கு வாரியங்கள் தங்களின் தகுதி சதவீதத்தை 12 சதவீத புள்ளிகளுக்கு மேல் மேம்படுத்தியுள்ளன.

இந்த ஆண்டு, குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கைகள் அதிக எண்ணிக்கையிலான (8) தகுதிகளைப் பதிவு செய்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டை விட தகுதி சதவீதத்தில் மிகப்பெரிய சரிவைக் கண்ட வாரியங்கள் ஆந்திரப் பிரதேசம் (6.2%), பீகார் (6.5%), கேரளா (7.1%) மற்றும் மணிப்பூர் (12.5%) ஆகும்.

மொத்தத்தில், 2019 உடன் ஒப்பிடும்போது 18 வாரியங்கள் தகுதி சதவீதத்தில் சரிவை பதிவு செய்துள்ளன, இவற்றில் மூன்று தேசிய வாரியங்களான CBSE, NIOS மற்றும் CISCE ஆகியவையும் அடங்கும்.

source https://tamil.indianexpress.com/education-jobs/neet-ug-2021-results-show-66-qualifiers-from-boards-other-than-cbse-364155/

Related Posts: