இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனி நபரின் தனிப்பட்ட தகவல்கள் மட்டுமின்றி பையோமெட்ரிக் தரவுகளும் அதில் இடம் பெற்றுள்ளன. எனவே ஆதார் அடையாள அட்டையில் சரியான பெயர், முகவரி, போன் நம்பர் மற்றும் பிறந்த தேதி இருப்பது அவசியமாகிறது.
Unique Identification Authority of India மூலம் ஆதாரில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே மாற்றங்களை மேற்கொள்ள இயலும். சில மாற்றங்களை நேரடியாக ஆன்லைன் மூலமாக மாற்றிக் கொள்ள இயலும். ஆனால் சில வகையான மாற்றங்களுக்கு கட்டாயம் அருகில் இருக்கும் ஆதார் எண்ட்ரோல்மெண்ட் மையங்களுக்கு செல்ல வேண்டும். இந்த மாற்றங்களுக்கு கட்டணங்களையும் வசூலிக்கிறது யு.ஐ.டி.ஏ.ஐ.
உங்கள் பெயரை எத்தனை முறை சரி செய்ய இயலும்?
ஒருவர் தன்னுடைய பெயரில் அதிகபட்சமாக 2 முறை மாற்றம் செய்ய இயலும். உங்களின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட வேண்டிய மாற்றங்களை ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ள இயலும்.
உங்களின் பிறந்த தேதியை, ஆண்டை மூன்று ஆண்டுகளுக்கு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும் பட்சத்தில் மட்டுமே மாற்ற இயலும். முகவரியை ஒரே ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்.
அட்டை வைத்திருப்பவர் தன்னுடைய பாலினத்தை ஒரே ஒருமுறை மட்டுமே சரி செய்ய இயலும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்களின் போன் நம்பரை மாற்ற வேண்டும் என்பது தொடர்பான தேவைகளுக்கு ஆதார் மையத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். ஆனால் இத்தகைய மாற்றங்களை நீங்கள் மேற்கொள்ள கட்டணமாக சிறிய தொகையை செலுத்த வேண்டும்,
source https://tamil.indianexpress.com/business/aadhar-update-how-many-times-you-can-change-or-update-your-name-date-of-birth-gender/