நீட் தேர்வு செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் 2021 தேர்வு முடிவுகள் இன்று (நவம்பர் 1) வெளியிடப்படவுள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மும்பை உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், எப்போது வேண்டுமானாலும் தேர்வு முடிவு வெளியாகலாம் என லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருந்தனர்.
இதற்கிடையில், தேசிய தேர்வு முகமைக்கு, உத்தர பிரதேச போலீசார் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். உ.பி.,யில் மட்டும் 25 மாணவர்கள் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்.
விண்ணப்பத்தாரர்கள் நீட் தேர்வு முடிவுகளை என்டிஏயின் அதிகாரப்பூர்வ தளத்தில் neet.nta.nic.in. காணலாம். தேர்வு முடிவுகளுடன், கட் ஆஃப் மார்க், கட் ஆஃப் விகிதம், அகில இந்திய தரவரிசை பட்டியல் ஆகியவையும் வெளியிடப்பட்டிருக்கும். மாணவர்கள் அதன் அடிப்படையில், நீட் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் நீட் 2021 கட்-ஆஃப் சதவிகிதம் மற்றும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். நீட் தேர்வு முடிவுகளுடன் கட்-ஆஃப் அறிவிக்கப்படும். பொது பிரிவினருக்கான கட்ஆஃப் மார்க் 50 சதவிகிதம் ஆகும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினர் குறைந்தப்பட்சம் 40 சதவிகிதம் கட்ஆஃப் பெற்றிருக்க வேண்டும்.
15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழுவும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் அதிகாரிகள் நடத்தும் நீட் கவுன்சிலிங் தொடர்பான தகவல்களை அறிய tnmedicalselection.net இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
மாணவர்கள் ஒரே மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில், அவர்களை தரவரிசைப்படுத்த டை பிரேக்கிங் பார்முலா பின்பற்றப்படுகிறது. முதன்முறையாக, இந்தாண்டு டை பிரேக்கிங்கில் விண்ணப்பதாரரின் வயது ஒரு காரணியாக கருதப்பட்டு வந்தது நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று (நவம்பர் 1) வெளியானது. இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்வின் முடிவுகள், மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வெழுதியுள்ளனர்.
நீட் தேர்வின் பைனல் ஆன்சர் கீ வெளியான சில மணி நேரத்தில், தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/education-jobs/neet-2021-result-annaounce-soon-in-nda-website-363168/