அரசு ஆவணங்களில் பெயரும் முதலெழுத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தும் தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறையின் அறிக்கைகள் அதை மீறும் விதமாக இருக்கிறது என்று புகார்கள் எழுந்துள்ளன.
அரசு ஆவணங்களில் உள்ள அனைத்து பெயர்களும் பெயரின் முதலெழுத்துகளும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்திருந்தாலும் பல அதிகாரிகள் தங்கள் பெயர்களை ஆங்கிலத்திலேயே குறிப்பிடுகின்றனர்.
மாநில அரசுத் துறை ஆவணங்களில் பெயர்கள் மற்றும் பெயரின் முதலெழுத்து தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறை வியாழக்கிழமை அரசாணையை வெளியிட்டது. மாநில அரசின் பல்வேறு துறைகள் சார்பாக வெளியிடப்பட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறையின் அறிக்கைகளைப் பார்க்கும்போது இந்த உத்தரவை அரசாங்கமே மீறுவதாகத் தெரிகிறது.
மாநில அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறையின் பல அறிக்கைகள் அமைச்சர்கள் பி.கே. சேகர் பாபு, என். கயல்விழி, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் எம்.பி.க்கள் எஸ்.ஆர். பார்த்திபன், ஏ.கே.பி. சின்ராஜ் மற்றும் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோரின் பெயர்கள் ஆங்கில முதலெழுத்துக்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த அரசாணைப்படி, முதலில் இரண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன – ஒன்று 1978ம் ஆண்டிலும் மற்றொன்று 1998ம் ஆண்டிலும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு 1997-ல் இதே விவகாரம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாங்க கடிதமும்கூட, சரியாக செயல்படுத்தப்படவில்லை. புதிய அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் வளர்ச்சித் துறையின் அரசாணைக்குப் பிறகு, செய்தி மற்றும் விளம்பரத் துறை, அமைச்சர்களின் பெயர்களுக்கு முன்னே ஆங்கிலத்தில் முதலெழுத்துகளைக் குறிப்பிட்டு செய்தி அறிக்கைகளை வெளியிட்டது.
அரசு ஆவணங்களில் உள்ள அனைத்து பெயர்களும் முதலெழுத்துகளும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தும் பல அதிகாரிகள் பெயர்களை ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர். இந்த அறிக்கைகள் மூலம் பொதுமக்களுக்கு செய்திகள் தெரிவிக்கப்படுவதால், செய்தி மற்று விளம்பரத் துறை அறிக்கைகள் அரசாங்க அதிகாரிகளின் ஆவணங்களாகக் கருதப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசு ஆவணங்களில் அனைவரின் பெயர்களும் பெயருக்கு முன்னே வரும் முதலெழுத்துகளும் தமிழில் இருக்க வேண்டும். இந்த அரசாணைப்படி, அமைச்சர் கே.என்.நேருவின் பெயரில் தமிழ் முதலெழுத்து ‘கா.நா.நேரு’ என்று’ இருக்க வேண்டும். ஆனால், அரசின் செய்திக்குறிப்பில் தமிழ் எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்களில் ‘கே.என். நேரு’ என்று உச்சரிக்கப்பட்டுள்ளன: அதேபோல், செய்தி மற்றும் விளம்பரத் துறை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான அமைச்சர்கள், பிரதிநிதிகள் மற்றும் பிற பெயர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் அரசாணையை மீறுவதாக உள்ளன.
இதே போல, தமிழ்நாடு அரசு இணையதளத்தில் அமைச்சர்களின் பெயர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் என்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எஸ். ரகுபதி, கே.ஆர். பெரியகருப்பன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல, இதேபோல், வெள்ளிக்கிழமை முதல், பெருநகர சென்னை மாநகராட்சியும் பல்வேறு செய்திக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில், ஆங்கில முதல் எழுத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது அரசுத் துறைகளின் அரசாணையை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
அரசுத் துறைகளின் உத்தரவை மீறுவது குறித்து, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழ் அலுவல் மொழியாக இருப்பதை உறுதி செய்வதற்கான அரசாணையை அமல்படுத்துவதில் எந்த அக்கறையும் இல்லை. இந்த விதிமீறலுக்கு பலமுறை தமிழ் வளர்ச்சித் துறை புகார் அளித்தும் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.” என்று வருத்தம் தெரிவித்தார். மேலும், பேசிய அவர், “தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ் மொழியைப் பயன்படுத்துவது குறித்து அரசு அதிகாரிகள் தமிழில் கையொப்பமிட்டு கோப்புகளை தமிழில் தயாரித்து செய்திகளை அனுப்புகிறார்களா என்று அரசு அலுவலகங்களை மட்டுமே ஆய்வு செய்ய முடியும்; ஆனால், அதிகாரிகள் அரசாணையை மீறியிருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுத வேண்டும். மேலும், அவர்களின் துறைத் தலைவர் மூலம் ஆட்சியர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் இதற்கு முந்தைய அரசாணைகளும் செயல்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதில் யாருக்கும் பொறுப்பு இல்லை… தமிழை அலுவல் மொழியாக உறுதி செய்ய வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறையிடம் இருந்து பலமுறை புகார் அளித்தும் தவறு செய்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-development-department-government-order-on-use-tamil-letter-in-name-and-initial-flouts-382592/