சிறுபான்மையினர் மாணவ-மாணவியர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த மாணவ / மாணவியர்கள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2016-17ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ / மாணவியரின் பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ / மாணவியர் முந்தைய ஆண்டின் இறுதித்தேர்வில் (ஒன்றாம் வகுப்பு நீங்கலாக) 50ரூ சதவீதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை/ ஆதிதிராவிடர் நலத்துறை/ மற்றும் இதர துறைகள்/ நலவாரியங்கள் மூலம் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது. ஆதார் எண் கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும்.
1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு மாணவ / மாணவிகள் புதியது (Fresh) மற்றும் புதுபித்தல் (Renewal) கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் Online மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தவிர விண்ணப்பிக்கும் போது இணைக்க வேண்டிய ஆவணங்களை ஸ்கேன் (Scan) செய்து அப்லோடு (Upload) செய்திட வேண்டும். விண்ணப்பித்த பின் விண்ணப்பத்தை படிவிறக்கம் (Download) செய்து கல்வி நிலையத்தில் 31.08.2016-க்குள் சமர்பிக்க வேண்டும். கல்வி நிலையங்கள் மாணவ / மாணவியர்களிடமிருந்து பெற்ற விண்ணப்பங்களைச் சரிபார்த்து ஆன்லைன் மூலம் 31.08.2016க்குள் பார்வேர்டு (Forward) செய்ய வேண்டும். மேலும் தகுதியுள்ள மாணவ / மாணவியரின் பட்டியலை உரிய ஒப்பம் இட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அளிக்க வேண்டும். சிறுபான்மையின மாணவ / மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித் தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுங்கள்.
#மாணவ-மாணவியர்களுக்கான இந்த கல்வி உதவித்தொகையினை பெற தேவையான வழிகாட்டுதல்களை நமது ACF இயக்கத்தின் நிர்வாக தோழர்கள் அளிக்கும் பெடி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். இது குறித்த சந்தேகங்கள் இருக்கும் நமது நிர்வாக தோழர்கள் என்னை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்று செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
ஆர்.சையத் பஷீர் (நிறுவன தலைவர்)
ஊழலுக்கு எதிரான இயக்கம்
(Anti Corruption Foundation)
தொலைபேசி : 9788049912.
தலைமையகம் : சென்னை.
வலைதளம்:
http://myacf.weebly.com
ஊழலுக்கு எதிரான இயக்கம்
(Anti Corruption Foundation)
தொலைபேசி : 9788049912.
தலைமையகம் : சென்னை.
வலைதளம்:
http://myacf.weebly.com