டாமினஸ் பீட்சா, கோத்ரேஜ், டாபர் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் ‘ஒன்று வாங்கினால்; இன்னொன்று இலவசம்’ என்ற வணிக உத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளன.
ஜி.எஸ்.டி வரி முறை அமலுக்கு வந்து ஒருமாதம் ஆகின்றது. இந்நிலையில், இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு காரணம், ஜி.எஸ்.டி வரி முறையில் அன்பளிப்பு, பரிசு என்று எதுவும் கொடுக்க முடியாது. ஏனெனில், கொடுக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் தனியாக வரி செலுத்த வேண்டும். இதனால், எதையும் முன்புபோல இலவசமாகக் கொடுத்துவிட முடியாது. இவற்றிற்கான வரி விகிதம் அதிகரிப்பதால் லாபத்தில் நட்டம் வருகிறது. எனவே, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்கிற கவர்ச்சிகரமான வணிக உத்தி விரைவில் முழுமையாக முடிவுக்கு வந்துவிடும் என்கிறார்கள் வணிக நிபுணர்கள்.
அதற்கு பதிலாக, தள்ளுபடி, விலைக்குறைப்பு, இரண்டு மூன்றாக சேர்ந்து வாங்கும் போது விலைக்குறைப்பு உள்ளிட்ட கவர்ச்சிகரமான உத்திகள் பயன்படுத்தப்பட உள்ளதாக டாமினஸ் பீட்சா, டாபர், கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.