சனி, 12 ஆகஸ்ட், 2017

குவாம் தீவை ஏவுகனை வீசி தாக்க உள்ளதாக வடகொரியா அறிவிக்க காரணம் என்ன? August 11, 2017

​குவாம் தீவை ஏவுகனை வீசி தாக்க உள்ளதாக வடகொரியா அறிவிக்க காரணம் என்ன?


மேற்கு பசிபிக் பெருங்கடலில் 544 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள குவாம் அமெரிக்காவின் ஆளுகையில் உள்ள ஒரு தீவாகும்.

கொரிய தீபகற்பம் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளதால் குவாம் தீவை ராணுவ தளமாக அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.

வியட்நாம் போரின் போது ஹனோய் தீவுகள் மீது குண்டு மழை பொழிந்த பி-52 போர் விமானங்கள் இங்கிருந்து தான் இயக்கப்பட்டன.

குவாம் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தீவு ஆகும். இங்கிருந்து பிலிப்பைன்ஸ் 2,500 கிமீ தொலைவிலும், ஜப்பான் 2,600 கிமீ தொலைவிலும், வட கொரியா 3,380 கிமீ தொலைவிலும் உள்ளது.



யார் இங்கு வசிக்கிறார்கள்?

குவாம் தீவில் 1,62,000 பேர் வசிக்கின்றனர், இதில் 40% சமாரோ இனத்தவரும், 25% பிலிப்பைன் நாட்டைச்சேர்ந்தவர்களும் பெரும்பான்மையானவர்கள் ஆவர்.

இங்கு அமெரிக்க படைத்துருப்பைச் சேர்ந்த 6,000 வீரர்கள் உள்ளனர்.

வடகொரியா இத்தீவை குறிவைக்க காரணம் என்ன?

குவாம் தீவில் இருக்கக்கூடிய அமெரிக்காவின் ராணுவ வலிமையும், வடகொரியாவில் இருந்து அருகாமையில் இருப்பதுமே இத்தீவை வடகொரியா குறிவைக்க முக்கிய காரணங்களாக உள்ளன.

எப்போது முதல் குவாம் அமெரிக்காவின் பகுதியாக விளங்கிவருகிறது?

1521-ல் இத்தீவை முதல் முதலாக போர்ச்சுகலைசேர்ந்த மெக்கலன் என்பவர் கண்டறிந்தவர். பின்னர் இத்தீவு 1526ல் ஸ்பானிஸ் மாலுமிகலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.

1898-ல் நடைபெற்ற ஸ்பானிஷ்- அமெரிக்க போருக்கு பின்னர் இத்தீவு அமெரிக்காவின் ஆளுகைக்கு கீழ் வந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இத்தீவு 1944ல் தன்னாட்சி பெற்றது.

இத்தீவின் பொருளாதாரம்:

அமெரிக்க ராணுவ வீரர்கள் மூலமே இத்தீவின் பொருளாதாரம் நடைபெற்று வந்தாலும், சுற்றுலாவும் இதன் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

தற்போது ஏவுகனைகள் மூலமாக இத்தீவை தாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வடகொரியா அறிவித்ததற்கு பின்னர் இத்தீவுவாசிகளிடம் அச்சமும், பதற்றமும் காணப்படுகிறது. என்றாலும் அமெரிக்க வீரர்கள் இருப்பதால் இவர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.