சனி, 12 ஆகஸ்ட், 2017

​பாஜகவை கடுமையாக விமர்சித்து கவிதை வெளியிட்ட நமது எம்.ஜி.ஆர் நாளேடு..!! August 12, 2017

​பாஜகவை கடுமையாக விமர்சித்து கவிதை வெளியிட்ட நமது எம்.ஜி.ஆர் நாளேடு..!!


அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் இதழிலில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வெளியாகியுள்ள கவிதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காவி அடி, கழகத்தை அழி என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த கவிதையில் உத்தர்காண்ட், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், பீகார், கோவா என பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைவதை பாஜக தனது சூழ்ச்சியால் தட்டிப்பறித்ததாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 

மணிப்பூரில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக மகுடத்தை பறித்தது, பீகாரில் பின்வழியே அதிகார பீடத்தை பிடித்தது ஆளுநர்களை அரசியல் ஏஜென்டுகளாக்கி அக்கிரமங்களை நடத்தியது என்பது போன்ற வரிகளால் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை நமது எம்.ஜி.ஆர் கடுமையாக விமர்சித்துள்ளது. 

வாக்களித்த மக்களை வரிக் குதிரையாக்கியது என்று ஜிஎஸ்டி வரிவிதிப்பை மறைமுகமாக விமர்சித்துள்ள அந்த கவிதை, மோடியா லோடியா என சவால்விடுத்த இயக்கத்தை மூன்றாக பிளந்து ஈரிலையை முடக்கி இன்னல்கள் தந்து வருவதாக பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளது. இந்த விமர்சன கவிதை  தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts: