மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி நகரில் உள்ள சந்தையில் சீன பொருட்களுக்கு வியாபாரிகள் தடை விதித்துள்ளனர்.
சிலிகுரி நகரின் மிக முக்கிய சந்தையாக ஹாங்காங் சந்தை உள்ளது. இங்கு உள்ளூர் பொருட்கள் முதல், சீனா, தாய்லாந்து, நேபாள் உள்ளிட்ட நாடுகளின் பொருட்களும் விற்கப்படுவது வழக்கம்.
டெல்லி, மும்பை போன்ற நகரங்களைவிட இங்கு 40 சதவீதம் வரை பொருட்கள் குறைந்த விலைக்கு கிடக்கும் என்றும் இதனால், சுற்றுலாப் பயணிகள் இங்கு பொருட்கள் வாங்குவது வாடிக்கை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், டோக்லாம் விவகாரத்தில், இந்தியாவுக்கு சீனா மிரட்டல் விடுத்து வருவதால், அந்நாட்டுப் பொருட்களை விற்க ஹாங்காங் சந்தை வியபாரிகள் தடை விதித்துள்ளனர்.
சீன பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும் வியாபாரம் பாதிக்கப்படவில்லை என்றும், சீனாவின் மிரட்டலுக்கு தங்கள் தரப்பில் தரப்படும் பதிலடி இது என்றும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.