புதன், 23 ஆகஸ்ட், 2017

இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு! August 22, 2017

இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு!


திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு வந்த வைகோவை, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வாசலுக்கே வந்து கைகுலுக்கி வரவேற்றார். 



பின்னர், கருணாநிதியைச் சந்தித்து  சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்த சந்திப்பு, சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. 


இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, கருணாநிதியின் நிழலாக 29 ஆண்டுகள் இருந்ததாகவும், அவருடனான தனது நெருக்கமான நட்பை நினைவுகூர்ந்து கண்கலங்க பேசினார். கருணாநிதியை சந்தித்தபோது, தனது கரங்களை அவர் இறுக்கமாக பற்றிக்கொண்டதாகவும், கருணாநிதி நலம்பெற்று மீண்டும் பழையபடி தொண்டர்களிடையே உரையாற்ற வேண்டும் என்றும் வைகோ தெரிவித்தார். 



தினமும் தனது கனவில் கருணாநிதி வருவதாக கூறிய வைகோ, மு.க. ஸ்டாலின் அழைப்பை ஏற்று, செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் முரசொலி பவள விழாவில் தான் பங்கேற்க இருப்பதாகவும் கூறினார்.

Related Posts: