ரேசன் கடைகள் ஏன் மூடப்படுகின்றன?
ஏன் பொருட்கள் நிறுத்தப்படுகின்றன?
என்ற உண்மையான பின்னணியை இப்போதும் ஊடகங்கள் பேசவில்லை. நமது ஊடகத்தின் வழியே நாம் பேசுவோம்.
ஏன் பொருட்கள் நிறுத்தப்படுகின்றன?
என்ற உண்மையான பின்னணியை இப்போதும் ஊடகங்கள் பேசவில்லை. நமது ஊடகத்தின் வழியே நாம் பேசுவோம்.
ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்தத்தில் இந்திய மோடி அரசு கையெழுத்திட்டு விட்டது. இதற்கு காங்கிரஸ் அரசும் உடந்தை என்று 2016 ஏப்ரல் மாதமே சொன்னோம். நாங்கள் பேசியது பொய் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூசாமல் பொய் சொன்னார். அவரின் பொய்யை வெளியிட்ட ஊடகங்கள், அவருக்கு நாங்கள் அளித்த பதில் அறிக்கையை வெளியிடவில்லை.
இப்போது நிர்மலா சீத்தாராமன் அவர்கள் பேசியது பொய் என்று அம்பலமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்போதும் அதைப் பற்றிய விவாதம் இல்லாமல், ரேசன் கடைகளில் பொருட்களை குறைப்பதற்கு வேறு பல்வேறு காரணங்களைக் காட்டி ஊடகங்கள் விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.
நமக்கு நாமே ஊடகம். உண்மையை பரப்புங்கள். அரசின் மக்களுக்கு எதிரான போக்கை தோலுரியுங்கள்