திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கொடைக்கானல் அருகேயுள்ள கீழானவயல் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன், தமது தோட்டத்தில் உருளைக் கிழங்கு, மலைப் பூண்டு மற்றும் பட்டர் பீன்ஸ் உள்ளிட்ட செடிகளைப் பயிரிட்டுள்ளார்.
நடப்பாண்டில் போதிய மழை பெய்யாததால் பயிர்கள் வாடியதுடன் விளைச்சலும் பாதிக்கப்பட்டது, இதனால் முருகன் மிகவும் வருத்தத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில் முருகன், நேற்று, தமது வீட்டில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.
வாயில் நுரை தள்ளியதைப் பார்த்த உறவினர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி கானா விலக்கு அரசு மருத்துவமனைக்கு முருகன் அனுப்பப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.