புதன், 7 பிப்ரவரி, 2018

விரைவில் உரையாற்றத் தயாராகிறார் கருணாநிதி! February 7, 2018

Image

வயது முதுமையின் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி அளிப்பதற்காக படிப்படியாக பரிசோதனைகள் மேற்கொள்ளாப்பட்டு வருகின்றன.

94 வயதாகும் கருணாநிதி முதுமையின் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் வீட்டிலேயே ஒய்வெடுத்து வருகிறார். மேலும் அவ்வவ்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையும் பெற்று வருகிறார். இந்நிலையில் மூச்சு விடுவதில் சிரமத்தை போக்க அவரின் தொண்டை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கருவியை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அதனை அகற்றினால் கருணாநிதி பேசுவதற்கு வாய்ப்பு அமையும் என மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதனையடுத்து அவர் உடல்நிலை குறித்து சோதனைகள் மேற்கொள்ளாப்பட்டு வருகிறது. அடுத்ததாக முழு உடற்பரிசோதனை மேற்கொள்ளவும் , அதன் அறிக்கைக்கு பின்னர் டிரைகோஸ்டோமி கருவியை அகற்ற மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது

Related Posts: