
சமீபத்தில் வெளியிடப்பட்ட வாட்ஸ் அப்பின் பிஸினஸ் செயலியில், தொலைபேசி இணைப்பு எண் மூலம் கணக்கு துவங்கும் புதிய வசதி வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்களிடம் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் அப்பின் பிஸினஸ் செயலியின் மூலம் ஏராளமான முதலீட்டாளர்களை கவர்ந்தது வாட்ஸ் அப் நிறுவனம். எனினும், கைப்பேசி எண்ணை பயன்படுத்தி மட்டுமே கணக்கு துவங்கும்படி வடிவமைக்கப்பட்டது சில முதலீட்டாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. தற்பொழுது, அதற்கு ஈடுகட்டும் வகையில், முதலீட்டாளர்களின் தொலைபேசி எண்ணை வைத்தும் வாட்ஸ் அப் துவங்கிக்கொள்ளும் புதிய வசதியை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது.
பிஸினஸ் செயலி, வணிக நோக்குடன் வெளியிடப்பட்டது என்றாலும், அதனை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கணக்கு துவங்கும்பொழுது, குறுந்தகவல் மூலம் சரிபார்க்கும் வாட்ஸ் அப், தொலைப்பேசி எண்ணை வைத்து கணக்கு துவங்கும் பொழுது, அழைத்திடுக (call me) என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன்மூலம், கைப்பேசி எண்ணில் துவங்கப்பட்ட கணக்கு போல தொலைபேசிக் கணக்கையும் உபயோகித்துக்கொள்ளலாம்.