ஞாயிறு, 13 மே, 2018

சோகமாக இருக்கும்பொழுது அதிகமாக சாப்பிடுவது ஏன்? May 12, 2018

Image

ஒருவர், சோகமாக அல்லது மன அழுத்தத்துடன் இருக்கும்பொழுது அதிக அளவில் உணவு உட்கொள்வார் என்பது நம்மில் பலருக்கு தெரிந்த உண்மை. 

பரபரப்பான இக்காலகட்டத்தில், தனிமையில் ஒருவர் இருக்கும்பொழுது துரித உணவு அல்லது நொறுக்குத்தீனிகளை அதிக அளவு சாப்பிடுவார்.  சாக்லேட் சாப்பிடுவதற்கும் மனநிலைக்கும் தொடர்பு இருக்கிறது என  அமெரிக்க மருத்துவ சங்கம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

அதாவது, சாக்லேட்டில், ஒருவரது மன நிலையை கட்டுப்படுத்தும் நொதி (enzyme) இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. சாக்லேட் மட்டுமல்லாமல், பல்வேறு வகையான உணவுப்பொருட்களில் இதுபோன்ற நொதி காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதில் பெரும்பான்மையான இடத்தை பிடித்திருப்பது நொறுக்குத்தீணிகள் மற்றும் துரித உணவுகள்.

உணவு எவ்வாறு மனநிலையை தீர்மானிக்கிறது?

உணவு, ஒருவரது மனநிலையை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. அதிக அளவில் பழங்கள், காய்கறிகள், மீன் வகைகள் போன்ற உணவு வகைகளை உட்கொள்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தாது எனவும் அசைவ உணவுகள், பாலினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் போன்றவை அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும் ஹார்ட்வார்ட் (hardvard) பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

அறிவியல் கூறுவது என்ன?

அதிக இனிப்பு சுவையுடைய உணவு பொருட்கள், நமது மூளையை அந்த சுவைக்கு அடிமையாக்கிவிடும். அதனால், சோகமாக அல்லது மன அழுத்தத்துடன் இருக்கும்பொழுது அந்த உணவை சாப்பிடுவதற்கான தூண்டுதலை மனித மூளை உருவாக்கும். அதனால், சாக்லேட் மற்றும் துரித உணவுகளை சாப்பிட்டவுடன் சோகமான மனநிலை நீங்கி மகிழ்ச்சி உருவாகும் என அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.