தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்க தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அன்றைய தினமே, ஆசிரியர்கள் மற்றும் வகுப்புகளுக்கான கால அட்டவணையை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்திட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், பொதுத்தேர்வு முடிவு வெளியிடும்போது, கடந்தாண்டு நடைமுறையே பின்பற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களின் விவரங்கள் வெளியிடப்படாது என்றும்,
மீறி வெளியிடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாணவர்களின் பெயர், புகைப்படம் அடங்கிய விளம்பரம் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.