ஞாயிறு, 13 மே, 2018

வயதான பெற்றோர்களுக்காக சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு! May 13, 2018

வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு 6 மாத காலம் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Image

வயது முதிர்ந்த பெற்றோர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த வரைவு அறிக்கையை சமூக நீதி அமைச்சகம் தயாரித்துள்ளது. பெற்ற குழந்தைகள் மட்டுமல்லாமல் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள், மருமகன், பேரன் போன்றவர்களும், மூத்த  பெற்றோர்களை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

பராமரிப்புக்கென அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தொகையான 10 ஆயிரம் ரூபாய் என்ற கட்டுப்பாட்டை நீக்கி, அதிகமாக சம்பாதிக்கும் பிள்ளைகள் அதற்கேற்ப பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் எனவும், வயது முதிர்ந்த தனது பெற்றோர்களை கைவிடுபவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 3 மாத சிறை தண்டனை,  6 மாதமாக உயர்த்த வேண்டும் என்றும் அந்த வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.