கொடைக்கானலில் நடைபெற்ற மலையேற்ற பயிற்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
கோடைக்காலம் வந்துவிட்டால் சுற்றுலா பயணிகள் மலைப் பிரதேசங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அதுமட்டுமின்றி தற்போது கோடை கால சீசன் ஆரம்பமாகியுள்ளது. கோடை மழையும் ஆரம்பித்து விட்டது.
தமிழகத்தில் அமைந்துள்ள மலைப் பிரதேசங்களான ஏற்காட்டில் மலர் கண்காட்சி, உதகையில் குதிரை பந்தயம், கொடைக்கானலில் மலையேற்றம் என கோடை கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. எனவே சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொடைக்கானலில் 2வது நாளாக நடைபெற்ற மலையேற்ற பயிற்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, இந்த பயிற்சியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரையண்ட் பகுதியில் தொடங்கிய இந்த பயிற்சியானது பாம்பே சோலா வனப்பகுதி வழியாக ஏரிக்கரை வரை நடைபெற்றது. 50க்கும் அதிகமான சுற்றுலாபயணிகள் இதில் கலந்து கொண்டனர்.