தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் எச்.டி.குமாரசாமி முன்னாள் இந்தியப் பிரதமர் எச். டி. தேவ கவுடாவின் மூன்றாவது மகன். இவர் கர்நாடக மாநில மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். கன்னட திரைப்படத்துறையில் தயாரிப்பாளராக உள்ளார். திரைப்பட வினியோகத் துறையிலும் ஈடுபட்டுள்ள இவர் திரையரங்கு உரிமையாளராகவும் உள்ளார்.
தற்போது நடந்து முடிந்திருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை இருந்து வருவதால், சுமார் 40 தொகுதியில் முன்னணியில் இருக்கும் இவரது கட்சியின் மேல் அனைவரது பார்வையும் பதிந்துள்ளது.
மேலும் காங்கிரஸ் தற்போது தனது அதிகாரப்பூர்வ ஆதரவை குமாரசாமிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளதால், பாஜகவின் எடியூரப்பா முதல்வராவார் என்று எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸின் இந்த அதிரடி அறிவிப்பு கர்நாடக அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த எச்.டி.குமாரசாமி?
➤எச்.டி.குமாரசாமி - மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர்
➤பிறந்த தேதி : டிசம்பர் 16, 1969
➤பிறந்த ஊர் : ஹாசன் மாவட்டம்
➤கர்நாடகாவின் 18வது முதலமைச்சர் (2006 - 2007)
➤பெற்றோர்: ஹெச்.டி. தேவ கவுடா , சென்னம்மா
➤1996 தேர்தலில் கனகாபுரா தொகுதியில் வெற்றிபெற்று அரசியல் பயணத்தை துவங்கினார்.
வகித்த பதவிகள்:
➤1996 - 11 வது லோக் சபா உறுப்பினர்
➤2004-2008 - கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்.
➤பிப்ரவரி 2006 - அக்டோபர் 2017 - கர்நாடக முதலமைச்சர்
➤2009- 15வது லோக் சபா உறுப்பினர் (2வது முறை)
➤ஆகஸ்ட் 2009 - கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்
➤அக்டோபர் 2009- பாராளுமன்ற வளாகத்தில் உணவு மேலாண்மை பற்றிய குழு உறுப்பினர்
➤மே 2013 - கர்நாடக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்