செவ்வாய், 15 மே, 2018

தேனீர் பிரியரா நீங்கள்? பீதியை கிளப்பும் புதிய ஆய்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளுங்கள்! May 14, 2018

Image

தினமும் 3 டீ குடிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் உடல் பருமனால் அவதிப்படும் வாய்ப்புகள் அதிகம் என சமீபத்தில் நடைபெற்ற ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த தனியார் அகாடமியுடன் நார்வே பொது சுகாதாரத்துறை இன்ஸ்டியூட் சேர்ந்து 50,000 தாய்மார்களைக் கொண்டு நடத்திய இந்த ஆய்வானது, கர்ப்பிணி பெண்கள் குறித்த உலகின் மிகப்பெரிய ஆரோக்கியம் தொடர்பான ஆய்வாகும். 

இந்த ஆய்வில், தினமும் 200 மில்லிகிராம் காஃபின் (Coffeine) எடுத்துக் கொள்ளும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பள்ளி பருவத்திற்கு முன்னான காலத்திலோ, பள்ளிப் பருவத்தின் போதோ அதிக உடல் பருமனால் அவதிப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

மைய நரம்பு மண்டலத்தை தூண்டி சுறுசுறுப்பை வழங்கக்கூடிய பானங்களில் காணப்படக் கூடிய காஃபின் உள்ள பொருட்களை கர்ப்பிணிப் பெண்கள் எடுத்துக் கொள்வது குறித்து அதிக கவனம் தேவை என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், அவற்றை முற்றிலுமாக தவிர்ப்பதும் நல்லது என்று கூறியுள்ளனர். 

200 மில்லி கிராம் காஃபின் என்பது ஒரு நாளில் 3 கப் டீ அல்லது 2 கப் காப்பியில் உள்ள காஃபின் அளவாகும். பல்வேறு உற்சாக பானங்களிலும், சாக்லேட்களிலும் காஃபின் அதிகளவில் உள்ளது.