புதன், 16 மே, 2018

பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்கவே காங்கிரசுடன் கூட்டணி - குமாரசாமி விளக்கம்! May 15, 2018

Image

பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்கவே காங்கிரசுடன் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாயிடம் உரிமை கோரினார். 

இதையடுத்து குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய சித்தராமையா, ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பதை ஆளுநர் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும், குமாரசாமிக்கு ஆதரவளிக்க முடிவெடுத்தது காங்கிரஸ் மேலிடம் தான் என்றும் குறிப்பிட்டார். 

குமாரசாமி தலைமையிலேயே ஆட்சி அமைய உள்ளது எனவும், மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது எனவும் சித்தராமையா கூறினார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்கவே மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரசுடன் கூட்டணி, அமைத்துள்ளதாக கூறினார்.