கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில் 10 அம்ச திட்டங்களை ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் கைகளில் பணமும், உணவும் உடனடியாக கிடைப்பதற்கு இந்த 10 அம்ச திட்டம் உதவும். அரசு இந்தத் திட்டங்களை பரிசீலனை செய்வதற்காக இதனை இங்கு பதிவு செய்கிறேன்.
1.விவசாயிகளுக்கு பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை இரட்டிப்பாக்கி 12 ரூபாயாக உடனடியாக ஒவ்வொரு பயனாளர்களின் வங்கிக் கணக்கிலும் செலுத்தவேண்டும்.
2.நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகளையும் பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். மாநில அரசிடமிருந்து விவசாயிகள் குறித்த விவரங்களை வாங்கி, ஒவ்வொரு குத்தகை விவசாயிகளுக்கும் உதவித் தொகையை ரூ.6,000 என்று இரண்டு தவணையாக வழங்கவேண்டும்.
3.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு உடனடியாக 3,000 ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும்.
4.நகர்புறங்களில் வாழும் ஏழை மக்களின் ஜன்தன் வங்கிக் கணக்கை வங்கிகள் மூலம் பெற்று அவர்கள் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 6,000 ரூபாயை உடனடியாக செலுத்தவேண்டும்.(ஜன்தன் வங்கிக் கணக்குகளை அடையாளம் காணும்போது, ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.5.ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் எல்லோருக்கும் ரேஷன் கடைகள் வாயிலாக 10 கிலோ அரிசி அல்லது கோதுமையை முற்றிலும் இலவசமாக வழங்கவேண்டும். வீட்டுக்குச் சென்று வழங்குவதை உறுதி செய்க.
6.பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அனைத்தையும், தற்போதைய பணியாட்கள் மற்றும் ஊதியத்தை வழங்கவேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொள்ளவேண்டும். ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கப்படும் ஊதியம் 30 நாள்களில் திரும்ப வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு அளிக்கவேண்டும்.
7.மேற்கூறிய பிரிவுகளில் பயனடையாதவர்களை அடையாளம் காண்பதற்கு எல்லா வார்டுகளிலும் கணக்கெடுப்பு நடத்தவேண்டும். புதிதாக கணக்கெடுக்கப்பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லையென்றால் அவர்களுக்கு உடனடியாக வங்கிக் கணக்கைத் தொடங்கி அவர்களுக்கு 3,000 ரூபாய் வழங்கவேண்டும்.
8.எல்லா வகையான வரிகளையும் செலுத்துவதற்கு ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கவேண்டும்.
9.இ.எம்.ஐயை ஜூன் மாதம் 30-ம் தேதி வரை வசூலிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
10.எல்லா அத்தியாவசியப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று பத்து வழிமுறைகளைத் தெரிவித்துள்ளார்.
credit news 18 tamil nadu

My statement on the current lockdown and how the Government can help make it better. @PMOIndia @narendramodi @nsitharaman @nsitharamanoffc @FinMinIndia #STAYHOMEINDIA
874 people are talking about this