செவ்வாய், 31 மார்ச், 2020

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்படலாம் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் தகவல்களை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கொரோனாவை முன்வைத்து ஏராளமான பொய் செய்திகள் வலம் வருகின்றன. அதன்படி, தற்போதைய லாக்டவுனை தொடர்ந்து அவசரநிலை பிரகடனம் நாட்டில் அமல்படுத்தப்படும் என்கிற தகவலும் ரவுண்டு கட்டி வருகிறது.
அதுவும் ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பின்னர் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்படும் என்றும், ராணுவத்தினருடன் இணைந்து பணியாற்ற என்.சி.சி., என்.எஸ்.எஸ். பிரிவினரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அந்த சமூக வலைதள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதனை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ராணுவ தகவல் தொடர்பு கூடுதல் இயக்குநரகம் கூறுகையில், சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது பொய்யான செய்தி என திட்டவட்டமாக கூறியுள்ளது.
Fake and malicious messages are circulating on social media about likely declaration of emergency in mid April and employment of , , NCC and NSS to assist the civil administration.

It is clarified that this is absolutely FAKE.
View image on Twitter
இதைப் பற்றி 1,399 பேர் பேசுகிறார்கள்

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற ஹேஷ்டேகுகளை சிலர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் பத்திரிகை தகவல் பணியகம் தனது ட்வீட்டில், “வதந்திகள் மற்றும் ஊடக செய்திகளில், லாக் டவுன் 21 நாட்கள் முடிந்த பிறகு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை செயலாளர் இந்த அறிக்கைகளை மறுத்துள்ளார், மேலும் அவை ஆதாரமற்றவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
credit indianexpress.com

Related Posts:

  • நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள். நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள். நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்றாலும் சிலர் நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். இந்த வ… Read More
  • பேஸ்புக் லைட்’டில் இணைய வேகம் குறைந்தாலும் ‘பேஸ்புக் லைட்’டில் பார்க்கலாம் கலிபோர்னியா: ஸ்மார்ட்போன்களில் 3ஜி, 4ஜி என இருந்தாலும், சில நேரங்களில் சிக்னல் பிரச்னை கார… Read More
  • ஏமாற்று வேலை!!! ஏற்றுமதி வகுப்பு என்ற பேரில் ஏமாற்று வேலை!!! தமிழ்நாடில் தற்போது அதிக லாபம் தரும் தொழில் என்றால் அது ஏற்றுமதி இறக்குமதி பற்றி வகுப்பு எடுப்பது தா… Read More
  • சுவையான காரைக்குடி மீன் குழம்பு பேச்சிலர் சமையல் : சுவையான காரைக்குடி மீன் குழம்பு தேவையான பொருட்கள்: மீன் - 1 /2 கிலோபுளி - எலுமிச்சை அளவுபூண்டு - 15 பல்சின்ன வ… Read More
  • Indian languages native tongue of 4.1 billion people (2/3 of world population). Apart from Hindi, the Indian languages in these are Bengali, Marathi, T… Read More