சனி, 21 மார்ச், 2020

கொரோனா எதிரொலி: ஜெர்மனியில் முதல்முறையாக லாக் டவுன் உத்தரவு!

நிலப்பரப்பில் ஜெர்மனியின் மிகப்பெரிய மாகாணமான பவாரியாவை (Bavaria) முடக்கி வைக்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனாவினால் பாதிப்பை சந்தித்துள்ள நாடுகளின் வரிசையில் குறிப்பிடத்தக்க நாடாக ஜெர்மனி மாறியுள்ளது. அங்கு இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,000ஐ கடந்துள்ள நிலையில் 44 பேர் பலியாகியுள்ளனர். 
ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக சுமார் 2,000 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 11 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜெர்மனியில் முதல் முறையாக பவாரியா மாகாணத்தில் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்தப்படும் ஜெர்மனியின் முதல் மாகாணமாகிறது பவாரியா. அடுத்த 2 வாரங்களுக்கு இந்நிலை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு அதிகளவிலான அபராதம் விதிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியிலேயே அதிகளவாக பவாரியா மாகாணத்தில் மட்டும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,400க்கும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv