credit ns7.tv
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 63 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஏறகெனவே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மற்றும் இதய நோய் ஆகியவையும் இருந்ததாக மருத்துவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இவர் மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இதன்
கொரோனா பாதிப்பால் ஏற்கெனவே மகாராஷ்டிராவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனாவிற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக கேரளாவில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்ல பிராணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரவிவருகிறது. இந்நிலையில் செல்ல பிராணிகள் மற்றும் வீட்டு விலங்குகள் மூலம் கொரோனா பரவுவதாக உலகில் எங்குமே உறுதி செய்யப்படவில்லை என மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனால் மக்கள் யாரும் தங்கள் செல்லப்பிராணிகளை சாலையிலோ அல்லது வேறு எங்கோ விட்டுவிட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.