வியாழன், 26 மார்ச், 2020

ரஷ்யாவில் சிங்கங்களை உலவவிட்டாரா புதின்? என்னமா யோசிக்கிறாங்க... ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் வீடுகளிலேயே இருக்க, ரஷ்ய தெருக்களில் சிங்கங்களை உலவவிட்டுள்ளதாக யோரோ ஒருவர் வதந்தியைக் கிளப்பிவிட...

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் வீடுகளிலேயே இருக்க, ரஷ்ய தெருக்களில் சிங்கங்களை உலவவிட்டுள்ளதாக யோரோ ஒருவர் வதந்தியைக் கிளப்பிவிட அந்த செய்தி சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பற்றி நாளொரு வதந்தியும் பொழுதொரு போலி செய்திகளும் வெளியாவது அதிகரித்து வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 3.49 லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் அவரிடம் இருந்து தும்மல், இருமல், மற்றும் அவருடன் நெருங்கி தொடர்புகொள்வதன் மூலம் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால், இந்த கோரோனா வைரஸ் சமூக பரவல் மூலம் மூலம் வேகமாக பரவி வருகிறது.
இதனால், பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஈரான், ரஷ்யா போன்ற பல நாடுகள் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்தும் நோக்கத்தில், தங்கள் நாட்டு எல்லைகளை மூடி மக்கள் நடவடிக்கையை முடக்கியுள்ளனர். மேலும், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸால் இக்கட்டனா சூழலை சந்தித்துள்ள பல நாடுகளும் இந்த புதிய வைரஸைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரஷ்ய அதிபரும் அந்நாட்டில் அரசின் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.
இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மக்களிடையே ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது.
ஆனால், கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு செய்திகள் மக்களை சென்றடைவதற்குள் போலி செய்திகள் விரைவாக மக்களை சென்று சேர்கின்றனர்.
அப்படி பரப்பப்பட்ட வதந்திகளால் பொருளாதார ரீதியாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொடர்பாக என்ன வதந்திகள் பரப்பப்பட்டன என்பது பற்றி சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.
சிக்கன், முட்டையால் கொரோனா பரவுகிறது என்று வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களி வதந்தி பரவியதால் சிக்கன் விலை ஒரே வாரத்தில் அதள பாதாளத்திற்கு சரிந்தது.
சாணத்தை உடலில் பூசிக்கொண்டால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது என்று யாரோ ஒரு போலியான செய்தியை பரப்ப சிலர் கூட்டமாக சாணியை உடலில் பூசிக்கொண்ட சம்பவம் நடந்தது.
கோமியம் குடிதால் கோரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று வதந்தி உலவ பலரும் கோமியம் குடித்துவருகின்றனர்.
இந்த ஃபேக் நியூஸ் உருவாக்குபவர்கள் இப்படி புதுசு புதுசா யோசித்து கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக வதந்திகளை உருவாக்கி வருகின்றனர்.

Vladimir Putin has given Russians two options.

You stay at home for 2 weeks or you go to jail for 5years.
No middle ground.

RUSSIA: Vladimir Putin has Dropped 800 tigers and Lions all over the Country to push people to stay Home.. Stay Safe Everyone!!
View image on TwitterView image on Twitter
இதைப் பற்றி 24.2ஆ பேர் பேசுகிறார்கள்

அந்த வரிசையில் யாரோ ஒருவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் வீடுகளில் இருக்க உத்தரவிட்டதோடு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்க 800 சிங்கங்களை ரஷ்ய தெருக்களில் உலவவிட்டுள்ளதாக தவறான தகவல் வெளியானது.
இந்த தகவல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. ரஷ்ய அதிபர் புதின் மக்கள் வெளியே வராமல் இருக்க சிங்கங்களை உலவ விட்டுள்ளார். வீட்டை விட்டு வெளியே வந்தால் 5 ஆண்டு சிறை தண்டனை என்பது போன்ற தகவல்கள் வெளியாகி வைரலானது.
கொரோனா வைரஸ் பயத்தை விட இந்த பரவும் சமூக வதந்திகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மக்களும் அச்சம் தரும் இது போன்ற தகவல்கள் உண்மையா பொய்யா என்று அறியாமல் அப்படியே ஃபார்வர்ட் செய்து பரப்புகின்றனர்.
கொரோனா களேபரத்திலும் இந்த ஃபேக் நியூஸிஸ்ட்கள் என்னமா யோசிக்கிறாங்க என்றுதான் மலைக்க வைக்கிறது.

கோரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல நாடுகள் மக்களை வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள் என்று அறிவுத்தியுள்ளது.
credit indianexpress.com