செவ்வாய், 31 மார்ச், 2020

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 32ஆக உயர்வு! March 30, 2020

இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
இன்று புனேவில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த 52 வயது நபர் உயிரிழந்துள்ளதாக புனே மேயர் முரளிதர் மொஹால் தெரிவித்துள்ளார். இதே போல மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவரும் இன்று கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தின் சிலிகுரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த 54 வயதுடைய பெண் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனைதொடர்ந்து இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,192 பேர் ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகளவாக மகாராஷ்டிராவில் 215 பேரும், கேரளாவில் 202 பேரும், கர்நாடகாவில் 83 பேரும், டெல்லியில் 72 பேரும் உத்தரபிரதேசத்தில் 72 பேரும் தமிழகத்தில் 67 பேரும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 
மருத்துவமனையில் சிகிச்சைக்காக 1061 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், சிகிச்சையின் மூலம் இதுவரை 102 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனாவிற்கு 31 பேர் உயிரிழந்துள்ளனர். 
மகாராஷ்டிராவில் 8 பேரும், குஜராத்தில் 6 பேரும், மத்திய பிரதேசத்தில் 4 பேரும், மேற்கு வங்கம், கர்நாடகாவில் தலா 3 பேரும், டெல்லி  2 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
credit ns7.tv