வெள்ளி, 27 மார்ச், 2020

மருத்துவ வசதிக்கு எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி ரூ.30 லட்சம் நிதியுதவி! March 27, 2020

கொரோனா மருத்துவ வசதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தையும், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சமும் வழங்குவதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
உலகையே நிலை குலைய வைத்திருக்கும் கொரோனா வைரஸால், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அரசுக்கு உதவும் பொருட்டு பல்வேறு கட்சி அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா கலைஞர்கள் என நிதியளித்து வருகின்றனர். 
இச்சூழலில் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ள அவர், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில்  தனது ஒரு மாத சம்பளத்தையும், அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்து அரசுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சமூக ஊடக பொழுபோக்குகளை தவிர்த்து புத்தகம் வாசிப்பு போன்ற ஆரோக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட கோரிக்கை வைத்துள்ளார். 
credit ns7.tv