புதன், 25 மார்ச், 2020

உள்நாட்டு கொரோனா டெஸ்ட் கிட்: 800 ரூபாயில் கொரோனா பரிசோதனை!

Image
நாட்டிலேயே முதல் முறையாக கொரோனா பாதிப்பை கண்டறியும் கிட்டை புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி செல்யூஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது; இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பரிசோதனை கிட் ரூ.80,000 விலை கொண்டது; ஒரு கிட்டை பயன்படுத்தி 100 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளலாம்.
ஒரு வாரத்தில் 1 முதல் 1.5 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் எங்களால் உற்பத்தி மேற்கொள்ள முடியும் என்றும் பொதுமக்களின் நலன் கருதி உற்பத்தியை பெருக்க முயற்சித்து வருவதாகவும் அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த பரிசோதனை கிட், இறக்குமதி செய்யப்படும் கிட்டின் விலையை விட நான்கில் ஒரு பகுதி மட்டுமே விலை கொண்டதாகவும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ரஞ்சித் தேசாய் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கிட்டை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அங்கீகரித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் கிட்கள் அதிகளவில் உற்பத்தி செய்து சந்தைக்கு வரும் போது கொரோனா பரிசோதனை விலை மலிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ள நிலையில் தற்போது பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகள் மலிவடையும் என்ற தகவல் பொதுமக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv