கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பஞ்சாப்பில் இன்று ஒருவர் உயிரிழந்தது மூலம் கொரோனாவிற்கு இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
கொரோனாவால் பஞ்சாப் மாநிலத்தில் முழு அடைப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பொது போக்குவரத்திற்கு அந்நாட்டு மாநில அரசு தடை விதித்துள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில்கள், மசூதிகள், குர்துவாராக்கள், தேவாலயங்கள், வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், உள்ளிட்ட இடங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும் அம்மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் பஞ்சாப்பில் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் இதுவரை கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டெல்லியிலும் முழு அடைப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்தகம் மற்றும் பலசரக்கு மற்றும் காய்கறி கடைகளை தவிர மற்ற கடைகளை மூடவும் டெல்லி அரசு பிறப்பித்துள்ளது.
credit ns7.tv