வெள்ளி, 20 மார்ச், 2020

ஊராட்சி மன்ற தலைவர் கொரனோவை தடுக்கும் விதமாக

Image
சேலத்திலுள்ள சித்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் கொரனோவை தடுக்கும் விதமாக தங்கள் பகுதி ஊர்மக்கள் பேருந்தில் பயணம் மேற்கொண்டு திரும்பி ஊருக்குள் வரும்போது கைகளை கழுவி விட்டு வர வலியுறுத்தி குழாய்கள் அமைத்து அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சேலம் சித்தனூர் பகுதி ஊராட்சி மன்ற தலைவராக உள்ள ராஜா ஊர் மக்கள் வெளி ஊர்களுக்கு பேருந்தில் பயணம் மேற்கொண்டு திரும்பி சித்தனூர் பேருந்து நிலையத்தில் இறங்கி ஊருக்குள் வருபவர்கள் கைகளை கழுவி விட்டு வர வேண்டும் என அறிவிப்பு பலகை மற்றும் கைகழுவ குழாய்கள், கிருமி நாசினிகள் அமைத்து நடைமுறைபடுத்தி விழிப்புனர்வு ஏற்படுத்தியுள்ளார். 

இதனால் ஊராட்சி பகுதியில் வசிக்ககூடியவர்கள் பேருந்தில் பயணம் மேற்கொண்டு ஊருக்குள் வரும் போது கைகளை கழுவி விட்டு செல்கின்றனர். பிரதமர் மோடி வருகின்ற 22 ஆம் தேதி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என வலியுறுத்தி உள்ளதையும் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று விழிப்புணர்வோடு இருக்க வலியுறுத்தி வருகிறார். கொரனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊராட்சி மன்ற தலைவர் மேற்கொண்ட நடவடிக்கை அனைவரிடத்திலும் வரவேற்பினை பெற்றுள்ளதால் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் இது போன்று செயல்பட வேண்டுமென வலியுறுத்தி வருகிறார்.
credit ns7.tv