இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால், உலகம் முழுவதும் இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 593 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 42 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும், 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
credit ns7.tv





